நாளை இந்தியா உடனான போட்டி பற்றி இலங்கை கேப்டன் கருத்து!

0
208
Srilanka

நடப்பு 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இரண்டாவது சுற்றை எட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டாவது சுற்றின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது. 2-வது ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணியிடம் விறுவிறுப்பான போட்டியில் தோல்வியடைந்து இருக்கிறது.

இந்தநிலையில் நாளை, ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி, ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ள இந்திய அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்தப் போட்டி ஆசிய கோப்பை தொடரில் மிக முக்கியமான போட்டி என்று கூறலாம். ஏனென்றால் இலங்கை அணி வெற்றி பெறும் பட்சத்தில் இறுதிப்போட்டிக்கு ஏறக்குறைய முன்னேற ஒரு வாய்ப்பு பிரகாசமாக உருவாகும். இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறும். அதே சமயத்தில் இந்திய அணி வென்றால் போட்டிக்கான ஒரு வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இந்த வகையில் இந்தப் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

- Advertisement -

இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடன் குஷால் மெண்டிஸ்க்கு கிடைத்த அதிர்ஷ்டத்தால் இரண்டாவது சுற்றுக்குள் வந்தது என்று கூறலாம். ஆனால் இரண்டாவது சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் உடன் மிகத் திறமையாக விளையாடி 175 ரன்களை விரட்டி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி பந்துவீச்சில் கொஞ்சம் கோட்டை விட்டதால் வெல்ல வேண்டிய ஆட்டத்தை பாகிஸ்தான் அணியிடம் தோற்று உள்ளது.

இந்தநிலையில் இந்தியாவுடனான போட்டி பற்றி இலங்கை அணியின் கேப்டன் டசன் சனகா கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர் கூறும் பொழுது “நேற்று இரவு இந்தியா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். அவர்கள் எங்களுடனான போட்டிக்கு தயாராக இருப்பார்கள். அவர்கள் எந்த ஒரு அழுத்தத்திலும் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

ஆட்டம் பற்றிய இலங்கை அணியின் யுக்தி குறித்து பேசிய அவர் ” எங்கள் யுத்தி முக்கியமாக பேட்டிங் வரிசையில் மேலே பெரிய பார்ட்னர்ஷிப்களை வைத்திருப்பது. அதை நாங்கள் பெற்றால் ஆட்டத்தில் வெல்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இல்லாத இந்திய அணியின் பந்து வீச்சு பற்றி கேட்கப்பட்ட பொழுது அதற்கு அவர் ” இப்பொழுது உள்ளவர்களை நான் அனுபவம் அற்றவர்கள் என்று நினைக்கவில்லை. இவர்களும் சரியான பந்து வீச்சு தாக்குதலை அளிப்பார்கள். அவர்கள் ஐபிஎல் என்று நிறைய விளையாடி இருக்கிறார்கள் அவர்களுக்கு அனுபவம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.