பாகிஸ்தானை வீழ்த்தி ஆறாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது இலங்கை அணி!

0
148
Asia cup

இன்று 15ஆவது ஆசிய கோப்பையில் இறுதிப் போட்டி யுனைடெட் அரபு எமிரேட் துபாய் சர்வதேச மைதானத்தில் இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது பரபரப்பாக நடந்து கொண்டு வருகிறது.

டாசில் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தத் தொடர் முழுவதும் முக்கியமான போட்டிகளில் எல்லாமே டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த அணிகள் மட்டுமே வென்று வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் போட்டிக்கு இரு அணிகளிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

- Advertisement -

இலங்கை அணியின் பேட்டிங்கை துவங்க வந்த துவக்க ஆட்டக்காரர்களில் குசல் மெண்டிஸ் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். நம்பிக்கை அளித்த நிஷாங்காவும் விரைவில் ஆட்டமிழந்தார். தனஞ்சய டி சில்வா ஓரளவிற்கு தாக்கு பிடித்து விளையாடினார். ஆனாலும் விக்கெட்டுகள் சரிந்து கொண்டேதான் இருந்தன. 50 ரன்களை கடந்த இலங்கை அணி, கேப்டனோடு சேர்த்து 5 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த இக்கட்டான நேரத்தில் ஜோடி சேர்ந்த ராஜபக்சே மற்றும் ஹ்சரங்கா இருவரும் மிகச்சிறப்பாக விளையாடி அரைசதம் பார்ட்னர்ஷிப் கொண்டுவந்தார்கள். அடுத்து ஹசரங்கா ஆட்டம் இழந்ததும் கருணாரத்னே வந்தார். அவருடன் சேர்ந்து அரைசத பார்ட்னர்ஷிப்பை ராஜபக்சே கொண்டுவந்தார். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி170 ரன்கள் குவித்தது. ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து பாபர் ஆசம் மற்றும் முஹம்மது ரிஸ்வான் ஜோடி களமிறங்கியது. இந்த முறையும் கேப்டன் பாபர் ஏமாற்றினார். இந்தத் தொடரில் அவர் மொத்தம் 68 ரன்களை எடுத்தார். ஆனாலும் வழக்கம் போல் நின்று முஹம்மது ரிஸ்வான் ஆட ஆரம்பித்தார். அடுத்த விக்கெட்டுக்கு வந்த இப்திகார் உடன் சேர்ந்து அரைசதம் தாண்டிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். மேலும் களத்தில் நின்று அரைசதம் அடித்து இந்த ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

- Advertisement -

ஆனால் இப்திகார் ஆட்டமிழக்க எல்லாம் தலைகீழாய் மாற ஆரம்பித்தது. நவாஸ் கருணாரத்னே பந்தில் ஆட்டம் இழந்தார். அதையடுத்து ஆட்டத்தின் 17வது ஓவரில் ஒரு பந்து விட்டு ஒரு பந்து என ஹசரங்கா முகமது ரிஸ்வான், ஆசிப் அலி, குல்தில் ஷா என மூன்று பேரை வீழ்த்தி ஆட்டத்தை இலங்கை அணியின் பக்கம் மொத்தமாக கொண்டு வந்தார்.

இதையடுத்து பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 147 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, 12வது முறையாக ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்த, 5 முறை கோப்பையையும் வென்ற இலங்கை அணி, ஆறாவது முறையாக ஆசிய கோப்பையை இன்று வென்றது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது இந்த இலங்கை அணி கோப்பையை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.