கில் திடீர்னு எங்க இருந்து வந்தாரு?.. ரோகித் டிராவிட்டே அதை செய்யல.. நியாயமா யோசிங்க – ஸ்ரீகாந்த் விமர்சனம்

0
199
Gill

இந்திய டி20 அணியில் இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு தரக்கூடாது என இந்திய முன்னாள் தேர்வுக் குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

தற்போது இந்திய டி20 அணிக்கு கில்லை கொண்டு வருவதற்கு தலைமை பயிற்சியாளர் கம்பீர் முயற்சி செய்து வருவதாக நிறைய செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. கில் உள்ளே வரும்பொழுது கம்பீர் உருவாக்கி இருக்கும் டி20 அணியில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியதாக இருக்கும். இது அணியை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இளம் வீரருக்கு நெருக்கடி

தற்போது இந்திய டி20 அணியில் மூன்றாவது இடத்தில் விளையாடும் திலக் வர்மாவுக்கு பதிலாக கில்லை உள்ளே கொண்டு வர முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. கில் வந்தால் அவர் துவக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டி இருக்கும். எனவே சஞ்சு சாம்சன் மூன்றாவது அல்லது ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்படுவார். இது அணியின் காம்பினேஷனை பெரிய அளவில் பாதிக்கும்.

இத்துடன் ஒரு துவக்க ஆட்டக்காரர் இந்திய அணிக்கு தேவை என்றால் ஜெய்ஸ்வால் டி20 கிரிக்கெட்டுக்கு மிகவும் சரியானவராக இருக்கிறார். இதன் காரணமாக கில்லை இந்திய டி20 அணைக்கு கொண்டு வரக்கூடாது என வெளியில் இருந்து இந்திய ரசிகர்களே பேசும் அளவுக்கு விஷயம் மிகவும் தீவிரமாக மாறி இருந்தது.

- Advertisement -

எங்கிருந்து வந்தார் கில்?

இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “கில் இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்திருந்தால் அவர் தாமாகவே இந்திய டி20 அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெற்று இருப்பார். பின்னர் ஜெய்ஸ்வால், சாம்சன், சாய் சுதர்சன் என யாருடைய பெயரையும் நாம் அலசி கொண்டிருக்க மாட்டோம். மேலும் கடந்த டி20 உலக கோப்பை தொடரில் மாற்று துவக்க ஆட்டக்காரராக அவர் இடம் பெறவில்லை. அப்படி இருக்கும் பொழுது அவர் திடீரென எங்கிருந்து வருகிறார்?”

இதையும் படிங்க : என்னால் தப்பு செய்ய முடியாது.. கில் ஸ்ரேயாசுக்கு நடக்க போறது இதுதான்.. அகர்கர் அதிரடி முடிவு

“மேலும் இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக கடைசியாக விளையாடிய டி20 தொடரில் கூட கில் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவர் சமீபத்தில் மற்ற வடிவங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் இதை வைத்து எல்லாம் தேர்வு செய்ய முடியாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -