என்னால் தப்பு செய்ய முடியாது.. கில் ஸ்ரேயாசுக்கு நடக்க போறது இதுதான்.. அகர்கர் அதிரடி முடிவு

0
134
Gill

அடுத்த மாதம் துவங்குகின்ற ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்தியத் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்க்கர் நேர்மையாக அதிரடி முடிவுகளை எடுக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

இந்த தொடருக்கு செப்டம்பர் 19ஆம் தேதி இந்திய அணி தேர்வு செய்யப்படுகிறது. இதற்கு முன்பான ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய தேர்வுக்குழு தலைவர் சில முக்கிய முடிவுகளை எடுத்து இருப்பதாகவும், அதனால் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

கில் கிடையாது

இந்த நிலையில் இந்திய டி20 அணிக்கு இந்திய டெஸ்ட் கேப்டன் கில்லை கொண்டு வரும் முடிவை அஜித் அகர்கர் நிராகரித்துவிட்டார் என்று செய்திகள் கூறுகிறது. அவரை உள்ளே கொண்டு வருவதால் பல விஷயங்கள் மாறும் என்பதால், இந்த முடிவை அவர் அதிரடியாக எடுத்திருப்பதாக தெரிகிறது.

மேலும் அவர் உள்ளே வந்தால் உடனடியாக சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பை இழந்து விடுவார். மேலும் கில்லை அணியில் எடுத்தால் திலக் வர்மாவை வெளியில் வைக்க வேண்டும். சிறப்பாக செயல்பட்டு இருக்கும் திலக் வர்மாவை நீக்கும் எண்ணம் தேர்வுக் குழுவுக்கு இல்லை என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

ஸ்ரேயாசுக்கு வாய்ப்பு

மேலும் ஐபிஎல் தொடரில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் சிறப்பாக விளையாடியிருந்த, மேலும் இன்னிங்ஸை எடுத்துச் செல்லும் திறமை உடைய ஸ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் இந்திய டி20 அணியில் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை டி20.. அந்த ஆர்சிபி பவுலருக்கு வாய்ப்பு கொடுங்க.. இப்போ வேற லெவல்ல பெர்பார்ம் பண்றாரு – முன்னாள் இந்திய வீரர்

இத்துடன் ஸ்ரேயாஸ் ஐயர் யுனைடெட் அரபு எமிரேட்டில் சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். எனவே மிடில் வரிசையில் அவருடைய அனுபவம் திறமை தேவைப்படுகிறது. இவருடன் இரண்டாவது விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே தைரியமாக கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரையும் புறக்கணிக்கும் முடிவை அஜித் அகர்கர் எடுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -