சிஎஸ்கே பெரிய குழப்பம் பயத்துல இருக்கு.. அவங்களோட இந்த முடிவை ஏத்துக்க முடியாது – பத்ரிநாத் விமர்சனம்

0
0

​ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமீபத்திய ட்ரேட் முடிவுகள் குறித்து முன்னாள் வீரர் எஸ்.பத்ரிநாத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

​ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் பரிமாற்றத்தின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வேகப்பந்து வீச்சாளர்களான கலீல் அகமது மற்றும் நாதன் எல்லீஸ் ஆகியோரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குக் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோரை வாங்கியுள்ளது. இந்த முடிவை சுட்டிக்காட்டி பத்ரிநாத் தனது யூடியூப் சேனலில் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

​இதுகுறித்து எஸ்.பத்ரிநாத் பேசும்போது “இது கிரிக்கெட் விதிகளின்படி சரியான ட்ரேட் கிடையாது, இது முழுக்க முழுக்க டெஸ்பரேஷன் அதாவது பதற்றத்தையும் அவசரத்தையும் காட்டுகிறது. சன்ரைசர்ஸ் அணியில் பிளேயிங் லெவனிலேயே இடம் கிடைக்காமல் பெஞ்சில் உட்கார்ந்திருந்த லிவிங்ஸ்டனை அதிக விலைக்கு வாங்கியுள்ளனர். எட்வர்ட்ஸ் யாருக்கும் தெரியாத ஒரு வீரர். ஒரு நல்ல இந்திய வீரரைக் கொடுத்துவிட்டு இப்படிப்பட்ட வீரர்களை எடுப்பது எந்த வகையில் நியாயம்?” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து அவர் பேசும்போது “சென்னை அணி இப்போது மிகவும் பதற்றமான நிலையில் இயங்குகிறது என்பதை இந்த ட்ரேட் காட்டுகிறது. கலீல் அகமது பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் அருமையாக வீசக்கூடிய இந்தியாவின் முன்னணி லெப்ட் ஆர்ம் ஃபாஸ்ட் பவுலர். அவரைத் தக்கவைத்திருக்க வேண்டும். வெளிநாட்டு வீரர்களை எங்கு வேண்டுமானாலும் கண்டுபிடித்து விடலாம், ஆனால் தரமான இந்திய வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்” என்று கூறி இருக்கிறார்.
.

- Advertisement -
- Advertisement -