ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் பேட்டிங் மிகவும் தடுமாற்றத்துடன் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் என்ன? மீண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் மிக அதிகபட்ச தொகைக்கு எல்எஸ்ஜி அணிக்கு ரிஷப் பண்ட் வாங்கப்பட்டு கேப்டன் ஆகவும் ஆக்கப்பட்டார். ஆனால் அவருக்கு அந்த அணியில் முதல் தொடரே மிகவும் மோசமானதாக அமைந்தது.
ரிஷப் பண்ட் பிரச்சனை
இந்திய இளம் வீரர்களில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் மிகப்பெரிய வீரராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றது போலவே அவரும் ஐபிஎல் தொடரில் இளம் வயதிலேயே அதிரடியான இன்னிங்ஸ் விளையாடி அனைவரது கவனத்தையும் கவர்ந்து இருந்தார்.
இந்த நிலையில் அவரால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிரடியாக விளையாட முடியவில்லை. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அவரால் நிலையான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. மிக வினோதமாக அவரது இயல்புக்கு எதிரான சிவப்பு பந்து கிரிக்கெட்டில்தான் தற்போது மிகவும் பிரபல வீரராக இருக்கிறார்.
இதைத்தான் செய்ய வேண்டும்
இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மிகவும் சிறப்பாக ஆரம்பித்த விளையாடினார். ஆனால் தற்போது அவருக்கு என்ன நடக்கிறது? என்று தெரியவில்லை. கேப்டன் பொறுப்பு அவரை அழுத்தத்தில் வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர் மிகவும் தடுமாறுகிறார்”
இதையும் படிங்க: அபிஷேக் ரீல்ஸ் எடுத்துக்கிட்டு இருந்தா உருப்பட முடியுமா?.. பணம் பெண்கள் பார்ட்டிதான் வீணா போக காரணம் – யோக்ராஜ் விமர்சனம்
“நான் அவருக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், அவர் கொஞ்சம் சுதந்திரமாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். அவர் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. எல்லாம் தானாகவே சரியாகும். அவர் கேப்டன்சியை அனுபவித்து செய்யாமல் அழுத்தத்தில் இருந்து வருகிறார்” என்று கூறியிருக்கிறார்.






