அபிஷேக் ரீல்ஸ் எடுத்துக்கிட்டு இருந்தா உருப்பட முடியுமா?.. பணம் பெண்கள் பார்ட்டிதான் வீணா போக காரணம் – யோக்ராஜ் விமர்சனம்

0
6
Abhishek

இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா பயிற்சி மற்றும் விளையாட்டு கவனம் செலுத்தாமல் ரீல்ஸ் எடுப்பதில் கவனம் செலுத்துகிறார் என யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இளம் வீரர்களுக்கு ஆரம்பத்திலேயே பெரிய புகழும் பணமும் கிடைத்ததால் அவர்கள் தடுமாறி விடுகிறார்கள், எனவே அவர்கள் தொடர்ந்து பயிற்சியில் கவனம் செலுத்தாமல் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வீணாக போய்விடுகிறார்கள் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

ரீல்ஸ் எடுத்தால் எப்படி?

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா தான் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்தார். கடைசியாக இறுதிப் போட்டியில் மட்டுமே அதிரடியாக அரைசதம் அடித்தார்.

இதுகுறித்து யோக்ராஜ் சிங் பேசும்பொழுது “உன் மனம் வேறு எங்கோ இருப்பதால்தான் நீ தோல்வியடைகிறாய். இதுதான் அபிஷேக் சர்மாவுக்கு நடக்கிறது. அந்தப் பையன் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறான். அவன் இரவு 9 மணிக்கு தூங்க சென்று காலை 5 மணிக்கு எழுந்து ஆயிரம் பந்துகளை சந்தித்து விளையாட வேண்டும்”

- Advertisement -

இவைதான் கெடுக்கின்றன

“அபிஷேக் சர்மா யுவராஜ் சிங் அருகில் செல்வதற்கு இன்னும் நீண்ட காலம் தேவைப்படும். முழு பிரபஞ்சமும் ஒழுக்கத்தின் அடிப்படையில்தான் செயல்படுகின்றன. அதுபோலத்தான் கிரிக்கெட் வீரர்களும் செயல்பட வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் எங்கு தவறு செய்கிறார்கள் என்றால் பணம் பெண்கள் பார்த்து என்று போய் தான் வீணாக போய்விடுகிறார்கள்”

இதையும் படிங்க : மயங்க் அகர்வால் இந்த முறை மீண்டும் 150 கிமீ-ல் பந்து வீசுவாரா?.. பவுலிங் கோச் பரத் அருண் விரிவான விளக்கம்

“நான் அபிஷேக் சர்மா மீது விரக்தியாக இருக்கிறேன். நான் சில நேரங்களில் அவருக்கு மெசேஜ் அனுப்புவேன். அவர் அதற்கு ஆமாம் சார் என்று பதில் அனுப்புவார். நீங்கள் எப்பொழுதும் காற்றில் அடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்தால் வெற்றி பெறவே முடியாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -