தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரியான் பராக் எப்படி கேப்டன் ஆனால் என்பது உலகத்துக்கே தெரியும் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த ஆண்டு மினி ஏலத்தில் அந்த அணி நிறைய மாறுதல்களை செய்திருக்கிறது. குறிப்பாக தங்களது கேப்டன் சஞ்சு சாம்சனை விட்டுக் கொடுத்திருக்கிறது. அவர் டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்று அசத்தலாக திரும்பி வந்திருக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக ரியான் பராக் மாமா ஒருவர் இருக்கிறார். அவர் ரியான் பராக்கை உடனடியாக கேப்டனாக கொண்டு வருவதற்கு கடந்த சீசன் பல உள்ளடி வேலைகளை பார்த்ததாக தொடர் செய்திகள் வந்தது. தற்போது அதன் ஒரு பகுதியாகவே அவர் கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேறி வந்திருக்கிறார். மேலும் தனக்கு அந்த அணியில் காலம் முடிந்து விட்டதாகவும், மேலும் அந்த அணியை எதிர்த்து விளையாடும் பொழுது உணர்ச்சிகளை தள்ளி வைத்துவிட்டு விளையாடுவேன் என்று சஞ்சு சாம்சன் கூறியிருந்தார்.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரியான் பராக் எப்படி கேப்டன் ஆனார் என்பது உலகத்துக்கே தெரியும். அது அவர்களுடைய விவகாரம். ஆனால் அந்த அணியில் அவர் ராஜா போல் இருக்கிறார். அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு சிறப்பாக விளையாடினார். ஆனால் கடந்த ஆண்டு அவருக்கு சரியானதாக இல்லை”
இதையும் படிங்க : தோனி சார் சொல்ல அந்த விஷயம் ஆடிப் போயிட்டேன்.. பஞ்சாப் கிங்சுக்கு இப்படியே ஆடுவேன் – இளம் வீரர் பேட்டி
“மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க ஜோடி மிகவும் ஆபத்தானது. மேலும் அவர்களுடைய அணியில் முதல் ஐந்து பேர் பேட்டிங் வரிசையில் சிறப்பாக விளையாடினால் அந்த அணி வெற்றி பெறும். இல்லையென்றால் அவர்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்வார்கள். அவர்கள் ஒரு அபாயமான அணி. ஆனால் ஐபிஎல் கோப்பையை வெல்லக்கூடிய அணி கிடையாது” என்று கூறியிருக்கிறார்.