இந்த மாதம் துவங்க இருக்கும் ஐபிஎல் தொடரில் தோனி கொடுத்த ஆலோசனையின் படியே தான் விளையாடுவேன் என பஞ்சாப் கிங்ஸ் இளம் வீரர் சூரியன்ஷ் ஷெட்கே கூறியிருக்கிறார்.
மும்பையைச் சேர்ந்த இந்த இளம் வீரர் அடுத்த ஹர்திக் பாண்டியாவாக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிதவேக பந்து வீச்சில் பேட்டிங்கில் பினிஷர் ஆக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனி சொன்ன அறிவுரை
தற்போது இந்திய கிரிக்கெட்டில் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களுக்கு பெரிய பற்றாக்குறை இருந்து வருகின்ற காரணத்தினால், இவர் மிகவும் கவனிக்கப்படும் வீரராக இருந்து வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் இவர் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்கலாம்.
இது குறித்து அவர் பேசும்போது “கடந்த ஆண்டு நான் தோனி சார் உடன் பேசினேன். அவர் எப்பொழுதும் நம்மீது நாமே எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது, அது நமக்கு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி விடும் என்று கூறினார். மேலும் நமது உள்ளுணர்வு சொல்லும்படி நாம் முடிவுகளை எடுக்க வேண்டும், அதுதான் ஒரு பினிஷருக்கு முக்கியமான குணம் என்றும் கூறியிருக்கிறார்”
ஒரு போட்டியில் செய்தாலும் போதும்
“தோனி சார் சொன்ன இன்னொரு விஷயம் என்னை மிகவும் பாதித்தது. ஒரு ஃபினிஷராக நீங்கள் விளையாடும் பொழுது பத்து போட்டிகளில் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் மூன்று போட்டிகளில் மட்டுமே ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நீங்கள் அதில் ஒன்று அல்லது இரண்டு போட்டியை வெற்றிகரமாக முடித்தாலே நீங்கள் சிறப்பாக இருப்பதாக அர்த்தம் என்று சொன்னார்”
இதையும் படிங்க : கம்பீர் இந்த வீரர் விஷயத்தில் நடந்து கொள்வதை புரிஞ்சுக்க முடியல.. ஏன் இப்படி பண்றாங்க? – கங்குலி கேள்வி
“எனவே நான் எனது உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு சரியாக புத்திசாலித்தனத்துடன் விளையாடுவது முக்கியமானது. கடைசியில் நாம் நம்மை நம்புவது மிகவும் முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.






