மும்பை கேப்டன் பதவியிலிருந்து ஹர்திக் விலகனும்.. இல்லனா இந்த பிரச்சனையாகிடும் – ஸ்ரீகாந்த் கருத்து

0
3
Hardik

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் கோப்பையை வெல்வதற்கு தற்போதைய கேப்டன் கார்த்திக் பாண்டியா தாமாகவே கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

இந்திய டி20 கேப்டன்களாக இருந்து உலகக் கோப்பையை வென்றிருக்கும் ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவருமே தாங்கள் விளையாடும் ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பை வகிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மூவரும் சேர்ந்து செய்ய வேண்டும்

மும்பை இந்தியன்ஸ் சிறந்த வீரர்களைக் கொண்டிருந்தாலும் ஹர்திக் பாண்டியாவால் இந்த அணியை வைத்து கோப்பையை வெல்ல முடியவில்லை. எனவே இந்த நிலைமையை மாற்றுவதற்கு புதிய கேப்டனாக சூரியகுமாரை கொண்டு வர வேண்டும் என ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும்போது “மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர்கள் ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா மூவரும் சேர்ந்து இந்த முடிவை எடுக்க வேண்டும். இந்த முறை அதிர்ஷ்டத்தை தங்கள் பக்கம் கொண்டு வர சூரியகுமார் யாதவை கேப்டன் ஆக்க வேண்டும். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் சூரியக்குமார் யாதவை கேப்டன் ஆக்கலாம். இப்போதே அறிவிக்க வேண்டும் என அவசியம் கிடையாது”

- Advertisement -

ஹர்திக் தானாக செய்ய வேண்டும்

“இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஹர்திக் கேப்டன்ஷியில் டி20 உலக கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் என இரண்டு கேப்டன்கள் விளையாட வேண்டி உள்ளது. இது அவர்கள் அணியில் உள் கொள்கை. ஆனால் வெளியில் இருந்து பார்க்கும்போது சூரியகுமார்தான் கேப்டன் ஆவதற்கு சரியானவராக இருப்பார்”

இதையும் படிங்க : பாவம் தனக்கு கேப்டன் பதவி கிடைக்கலைன்னு அந்த மும்பை வீரர் நிச்சயம் வருத்தமாய் இருப்பார்.. அதான் மனித இயல்பு – அஸ்வின் வெளிப்படை

“தற்போது தனக்கு கேப்டன் பதவி வேண்டாம் சூரியகுமார் யாதவ் கொடுங்கள் என ஹர்திக் பாண்டியாவே தாமாக முன்வந்து சொன்னால் எல்லா பிரச்சினையும் சரியாகிவிடும். இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரே வழி ஹர்திக் பாண்டியா தான் சூரியகுமார் தலைமையில் விளையாட தயார் என அறிவிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -