பாவம் தனக்கு கேப்டன் பதவி கிடைக்கலைன்னு அந்த மும்பை வீரர் நிச்சயம் வருத்தமாய் இருப்பார்.. அதான் மனித இயல்பு – அஸ்வின் வெளிப்படை

0
47

19வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா வருகிற 28ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை 2023 ஆம் ஆண்டு வரை ரோகித் சர்மா கேப்டனாக தொடர, அதற்குப் பிறகு ஹர்திக் பாண்டியா கடந்த இரண்டு ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதில் கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்று வரை முன்னேறிய அவரது அணி இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வி அடைந்து மும்பை அணி வெளியேறியது.

இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக மும்பை நிர்வாகம் தக்க வைத்தது. இந்த நிலையில் சமீபத்தில் இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையை வென்று கொடுத்து கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட சூரியகுமார் யாதவ் இந்த முறை தனக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி கிடைக்காதது குறித்து சற்று வருத்தம் அடைந்து இருப்பார் என்று சிஎஸ்கே முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அஸ்வின் குறிப்பிடும் போது “இதை நீங்கள் ஒரு தனிப்பட்ட கண்ணோட்டத்தில் அணுகினால் நானும் கேப்டனாக இருக்க வேண்டும் என்று நிச்சயமாக சூரியா நினைப்பார். சூர்யா நிச்சயம் அப்படித்தான் சிந்திப்பார் என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் சமீபத்தில் அவர்தான் இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையை வென்று கொடுத்து கேப்டனாக செயல்பட்டார். எனவே அவ்வாறு நினைப்பது என்பது மனித இயல்பு தான்.

ஆனால் சூர்யா இப்போது எந்த விதமான கட்டுப்பாடும் இன்றி தன் ஆட்டத்தை ரசித்து விளையாடுவது அவருக்கான இயல்பாகும். கடந்த ஆண்டும் அவருக்கு ஒரு பேட்ஸ்மேன் ஆக ஒரு திருப்திகரமான காலகட்டமாக அமைந்தது. என் பார்வையில் சூர்யாவிற்கு கேப்டன் பொறுப்பு வழங்குவது இயல்பான மறுக்க முடியாத ஒரு விஷயமாகும். அவருக்குத்தான் கேப்டன் பொறுப்பு வழங்க வேண்டும். ஆனால் அது நடைபெறாமல் இருப்பது சற்று வருத்தத்திற்குரிய விஷயமாகும்” என்று அஸ்வின் பேசுகிறார்.

- Advertisement -