இந்திய அணி ஜிம்பாப்வே அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியை விட ஜிம்பாப்வே அணி ஆபத்தானது என்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. அதேசமயத்தில் நாளை மதியம் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து தென் ஆப்பிரிக்கா விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வே அணியை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததால் ரன் ரேட்டில் மிகப்பெரிய இடத்தில் உள்ளது. தற்போது இந்திய அணியை போலவே ஜிம்பாப்வே அணியும் தனது அடுத்த இரண்டு போட்டிகளை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும் பொழுது “வெஸ்ட் இண்டீஸ் அணியை எடுத்துக் கொள்ளும் பொழுது அவர்கள் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறுவதற்காக யோசிக்கும். ஆனால் ஜிம்பாப்வே இழப்பதற்கு எதுவும் இல்லாத அணி. இதனால் இவர்கள்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியை விட ஆபத்தானவர்கள்”
“இந்த காரணத்தினால் ஜிம்பாப்வே அணி எந்த பயமும் இல்லாமல் தான் இந்திய அணிக்கு எதிராக விளையாடும். அவர்கள் எந்த கவலையும் இல்லாமல் விளையாடுவார்கள். தென் ஆப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வி அடைந்தால் இந்தியாவின் கதை முடிந்து விடும்”
இதையும் படிங்க: 24 பந்துல பாபர் செய்தது கிரிமினல் வேலை.. பெரிய வீரர்கள் உண்மைய ஒத்துக்குவாங்க – இமாத் வாசிம் விமர்சனம்
“இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் ஏதோ போராடி தோற்றது போல தெரியலாம். ஆனால் 187 என்ற பெரிய இலக்கை துரத்தும் பொழுது அவர்கள் அழுத்தத்திற்கு உள்ளாகி விட்டார்கள். இப்படியான நேரங்களில் தடுமாறி ஆட்டம் இழக்கும் சூழ்நிலை உருவாகும். எனவே இந்திய அணியை மன அழுத்தம் சோர்வடைய வைத்து விடக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.