நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் பாபர் அசாம் பேட்டிங் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சனம் செய்து வருகிறார்கள்.
தற்போது பாபர் அசாம் உடன் இணைந்து விளையாடிய வீரரான இமாத் வாசிம் மிகவும் காட்டமான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார். பாபர் அசாம் ஆட்டம் இழந்த முறை கிரிமினல் குற்றம் என்று கூறியிருக்கிறார்.
மெதுவான ஆட்டம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதல் இரண்டு விக்கெட்டுகள் பவர் பிளேவில் விழுந்ததும் பாபர் அசாம் உள்ளே வந்து இரண்டு பவுண்டரிகள் உடன் அதிரடியாக ஆரம்பித்தார். ஆனால் அதற்கு அடுத்து அவரால் இன்னிங்சை வேகமாக கொண்டு செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் ஜேமி ஓவர்டன் பந்தில் மோசமான ஒரு ஷாட் விளையாடி 24 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நேற்று அவர் ஆட்டத்தை துவங்கிய விதத்திலும், நிறைய பந்துகளை சந்தித்ததாலும் 50 பந்துக்கு 70 ரன் என்று இறுதிவரை நின்று முடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் பந்துக்கு பந்து விளையாடிவிட்டு ஆட்டம் இழந்துவிட்டார்.
கிரிமினல் குற்றம்
இதுகுறித்து இமாத் வாசிம் பேசும்பொழுது “பாபர் அசாம் நீங்க இன்னும் எத்தனை போட்டியில் இப்படி குழப்பத்தை விளைவிக்க போறீங்க? 24 பந்துகளை எதிர் கொண்டு விளையாடிய பிறகு இந்த முறையில் அவுட் ஆனால் அது கிரிமினல் குற்றம். இந்திய அணிக்கு எதிராகவும் இப்படியே பார்த்தோம். அங்கும் தனிப்பட்ட திட்டங்கள் எதுவும் இல்லை. பாபர் அசாம் தனது குற்றத்தை கையை உயர்த்தி ஏற்றுக் கொள்கிறாரா?”
இதையும் படிங்க : ஜிம்பாப்வே போட்டி.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. 3 பெரிய மாற்றங்கள்.. பேட்டிங் ஆர்டரில் வித்தியாசம் – முழு அலசல்
“கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக குறிப்பிட்ட ஐந்து வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவர்கள் தங்களுடைய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்போதும் கூட அவர்கள் சிறப்பாக விளையாடவில்லை என்று தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.






