இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான விளையாடுகிறது. இந்த போட்டியில் அந்த அணி என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து ஸ்ரீகாந்த் பேசி இருக்கிறார்.
தற்போது பஞ்சாப் அணிக்கு எதிராக மழையின் காரணமாக கைவிடப்பட்ட போட்டியின் மூலமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒரு புள்ளி கிடைத்திருக்கிறது. மற்றபடி அந்த அணி இன்னும் வெற்றி கணக்கை துவங்காமல் இருந்து வருகிறது.
ஒரே போல இரண்டு வீரர்கள்
தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரகானே மற்றும் ரகுவன்சி என ஒரே ரோலை செய்யக்கூடிய இரண்டு வீரர்கள் பேட்டிங் மேல் வரிசையில் இருப்பது பெரிய பிரச்சனையை உண்டாக்கி வருகிறது. இருவரில் ஒருவர் விளையாடும் போது மட்டும்தான் அந்த அணி பேட்டிங் யூனிட் வலிமையானதாக மாறும்.
மேலும் ரகானே முதல் போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடினார். அதற்கு அடுத்து அவரிடம் இருந்து பெரிய அளவில் ரன்கள் வரவில்லை. இத்துடன் ஐபிஎல் தொடரில் தொடக்க பேட்டிங் பெரிய அளவில் அதிரடியாக மாறி வருகிறது. அதற்கு சரியானவராகவும் அவர் இல்லை. மேலும் இந்த முறை சுனில் நரைன் தொடக்க இடத்திற்கு அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரகானே மாற வேண்டும்
இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது “ரகானே கேப்டன் என்ற காரணத்திற்காக மட்டுமே விளையாடும் அணியில் இடம் பிடிக்கிறார். அவர் பல வருடங்களாக தொடர்ந்து ஐபிஎல் தொடரில் தொடக்க இடத்தில் விளையாடி அந்த இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறார். அவரை நீக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அவர் ஐந்தாவது இடத்தில் விளையாடி அணியை காப்பாற்ற வேண்டும். மேலும் சுனில் நரைன் தொடக்க இடத்திற்கு வர வேண்டும்”
இதையும் படிங்க : கேப்டனா அபிஷேக் ஷர்மா கிட்ட இதைத்தான் எதிர்பார்க்கிறேன்.. இளம் பவுலர்களுக்கு வாய்ப்பு கொடுக்க காரணமும் இதுதான் – இஷான் கிஷான் பேச்சு
“மூன்றாவது இடத்தில் கிரீன் மற்றும் நான்காவது இடத்தில் ரகுவன்சி இருக்க வேண்டும். அதே சமயத்தில் ரிங்கு சிங் ஐந்தாவது இடத்தில் வரக்கூடாது. அவரால் அங்கு ரன்கள் எடுக்க முடியாது. எனவே அவருக்கு ஏற்ற இடமான பினிஷிங் செய்ய ஏழாவது இடத்தை கொடுக்க வேண்டும். ரோமன் பவல் ஆறாவது இடத்தில் விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






