பெரிய ஆஃபரை கொடுத்த டெல்லி கேப்பிட்டல்ஸ்.. பாண்டியாவை தங்கள் பக்கம் இழுக்க திட்டம்.. பெரிய சிக்கலில் மாட்டிய சிஎஸ்கே.. முழு விபரம்

0
0

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியா, அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக மும்பை அணியில் இருந்து விலகி டிரேடிங்கில் வேறு அணிக்கு செல்ல முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதில் அவர் முதல் தேர்வாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தேர்வு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அவரை வாங்க ஆர்வம் சிஎஸ்கே காட்ட மும்பை இந்தியன்ஸ் அணி அவருக்கு பதிலாக இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே மற்றும் சிவம் துபே இருவர் வேண்டும் என கோரிக்கை விடுத்தது.

இதற்கு மறுப்பு தெரிவித்த சிஎஸ்கே சிவம் துபே உடன் கலீல் அகமதுவை தருகிறோம் என்று கூறியது. இதற்கு மும்பை அணியும் முடிவு சொல்லாமல் இழுபறியில் இருக்க, திடீரென்று களத்தில் குதித்த டெல்லி கேப்பிடல்ஸ் ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. அதற்கு பதிலாக தங்கள் அணியில் இருந்து அக்சார் பட்டேல் மற்றும் அசுத்தோஸ் சர்மா இருவரை விடுவிக்கிறோம் என்று கூறியிருக்கிறது. இது தற்போது ஐபிஎல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் அக்சார் பட்டேல் மற்றும் அசுத்தோஸ் சர்மாவை சேர்த்தால் அந்த அணியின் பேட்டிங் ஆர்டரை மேலும் வலுவாக்கும். மேலும் டெல்லி அணிக்கு ஹர்திக் பாண்டியா வந்தால் கேப்டன் பொறுப்பையும் அவருக்கு கொடுப்போம் என டெல்லி நிர்வாகம் அவருக்கு உறுதி உறுதி அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே ஹர்திக் பாண்டியா எந்த அணிக்கு விளையாடுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -