நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இளம் பவுலர்களை வைத்து போட்டியை வென்றது. இந்த வெற்றி குறித்து கேப்டன் இஷான் கிஷான் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் அபிஷேக் சர்மா முதல் பந்தில் கோல்டன் டக் ஆனார். ஆனால் கேப்டன் இஷான் கிஷான் மற்றும் ஹென்றி கிளாசன் அதிரடியில் சன் ரைஸர் ஹைதராபாத் அணி 200 ரன்கள் தாண்டி எடுத்து வெற்றி பெற்றது.
இளம் பவுலர்கள் அசத்தல்
நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பிரபுல் ஹின்ஜே மற்றும் சாகிப் உசைன் என இரண்டு இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இவர்கள் இருவருமே தலா நான்கு விக்கெட் கைப்பற்றி போட்டியை முடித்து வைத்தார்கள்.
இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சில் மிகவும் பலவீனமான அணியாக காணப்பட்டது. ஆனால் நேற்று இரண்டு இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டது அந்த அணியின் வலிமையை மாற்றி உள்ளது.
அபிஷேக் இதை செய்யணும்
இதுகுறித்து இஷான் கிஷான் பேசும்போது “உங்கள் இளம் பந்துவீச்சாளர்கள் எவ்வளவு ஆர்வமாகவும், உற்சாகமாகவும், எத்தனை போட்டிகளில் விளையாடுவதற்கு விரும்புகிறார்கள் எனவும் நீங்கள் கவனிக்க வேண்டும். அவர்கள் இந்த முழு சீசனிலும் பயிற்சியாளர்களுடன் இணைந்து மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைப்போம். குறிப்பாக எங்களுடைய ஹோம் கிரவுண்டில் கொடுக்க நினைத்தோம். அவர்கள் சாதித்தார்கள்”
இதையும் படிங்க : சூரியவன்சிய சும்மா தூக்கிடுவேன்னு எனக்கு தெரியும்.. ஏற்கனவே எழுதி வச்சு செஞ்சேன் – பிரஃபுல் ஹின்ஜே பேட்டி
“அபிஷேக் ஷர்மா எப்படி விளையாடுவார் என அனைவருக்கும் தெரியும். அவருடைய நாளாக இருந்தால் அணியின் ஸ்கோரை 240, 250 என்று எடுத்துக்கொண்டு சென்று விடுவார். சில போட்டிகளில் இப்படியும் அவுட் ஆவார். எனவே நாங்கள் அவரிடம் ஒரே மாதிரியான ஆட்டத்தையே எதிர்பார்க்கிறோம். அவர் அதிரடியாகவே விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






