நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டம் இழக்காமல் அரை சதம் அடித்ததின் மூலமாக கமிந்து மெண்டிஸ் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை செய்திருக்கிறார்.
இலங்கையில் நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டு வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்திருக்க, இரண்டாவது போட்டி இன்று துவங்கியது.
நியூசிலாந்து அணிக்கு எடுத்ததுமே நெருக்கடி
இன்றைய போட்டியிலும் இலங்கை அணி முதலில் டாஸ் வென்றதை தொடர்ந்து பேட்டிங்கை தேர்வு செய்ய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே நெருக்கடியாக அமைந்தது. பதும் நிஷாங்கா 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேற நியூசிலாந்து அணிக்கு கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.
இப்படியான நிலையில் உள்ளே வந்த தினேஷ் சண்டிமால் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 116 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டம் இழக்காமல் 78 ரன்கள் எடுத்தார். மேலும் கருணரத்னே 46 ரன்கள் எடுத்தார்.
கமிந்து மெண்டிஸ் உலகச்சாதனை
இந்த நிலையில் முதல் நாளின் மூன்றாவது செஷனில் பேட்டிங் செய்ய வந்த கமிந்து மெண்டிஸ் அதிரடியாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 56 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உடன் ஆட்டம் இழக்காமல் 51 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். இலங்கை முதல் நாள் ஆட்டம் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து வலிமையாக இருக்கிறது.
இந்த நிலையில் கமிந்து மெண்டிஸ் தனது எட்டாவது டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் 50 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்திருக்கிறார். அவர் அறிமுகமானதில் இருந்து அவர் விளையாடிய எல்லா போட்டிகளிலும் அரை சதம் தாண்டி அடித்திருக்கிறார். இதன் மூலம் அவர் தொடர்ச்சியாக 8 முறை 50+ ஸ்கோர் எடுத்திருக்கிறார். 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது உச்ச சாதனையாக பதிவாகி இருக்கிறது.
இதையும் படிங்க : இதெல்லாம் ரொம்ப தப்பு.. என்னை வச்சு ஆர்சிபி விராட் கோலி என ஏன் பொய்யா சொல்றிங்க? – ரிஷப் பண்ட் கோபம்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி தொடர்ச்சியாக அதிக 50+ ரன்கள் எடுத்தவர்கள் :
8- கமிந்து மெண்டிஸ்*
7- சவுத் ஷகீல்
6- பெர்ட் சட்க்ளிஃப்
6- சயீத் அகமது
6- பசில் புட்சர்
6-சுனில் கவாஸ்கர்