110 ரன் வெற்றி.. நாங்க செஞ்சது இதைத்தான்.. அதனாலதான் இந்திய அணியை தோற்கடிக்க முடிந்தது – வெல்லால்கே பேட்டி

0
388

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி முழுவதுமாக வெற்றி பெற்ற கையோடு ஒரு நாள் தொடரை எதிர்கொண்ட நிலையில் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் தோல்வியடைந்து ஒரு நாள் தொடரை இழந்திருக்கிறது.

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த வெல்லால்கே போட்டி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

கௌதம் கம்பீர் புதிதாக பயிற்சியாளராக பொறுப்பேற்ற இந்திய அணி இலங்கைக்கு எதிரான டி20 தொடரை மூன்று போட்டியில் வெற்றி பெற்று வெற்றிகரமாக ஒரு நாள் தொடரை எதிர்கொண்டது. முதல் போட்டியில் வெற்றி பெற்றிருக்க வேண்டிய நிலையில் முதல் போட்டியை டிரா செய்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மூன்றாவது ஒருநாள் போட்டியிலாவது வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 110 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 248 ரன்கள் குவித்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி இலங்கையின் சுழற் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 26 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய வெல்லால்கே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இந்தத் தொடர் குறித்து அவர் கூறும் போது “எனது அணியின் கேப்டன், சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அனைவரும் எனக்கு அளித்த சிறந்த ஒத்துழைப்பினால்தான் நான் இங்கே இருக்கிறேன். இந்த ஆடுகளத்தில் பந்து திரும்பும்போது அதற்கு ஏற்றவாறு எங்களை சரி செய்து கொண்டோம். முதல் இரண்டு போட்டிகளும் இன்றைய போட்டியை போலவே இருந்தாலும் இன்று நாங்கள் குறைந்த தவறுகளே செய்திருந்தோம்.

எங்கள் பேட்ஸ்மேன்கள் நன்றாக பேட்டிங் செய்தனர், மற்றும் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர். எங்கள் அணி வீரர்கள் ஒருவரை ஒருவர் ஆதரிக்கிறார்கள். நான் இந்த அணியின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார். இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வெல்லால்கே தொடர் நாயகன் விருதையும் பெற்றிருக்கிறார்.

இதையும் படிங்க:இந்திய அணிக்கு எதிரா நாங்க முடிவு செஞ்சது இதத்தான்.. எங்க கோச் இருக்க என்ன கவலை – அசலங்கா பேச்சு

இந்திய அணிக்கு எதிரான இலங்கையின் இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் இருதரப்பு தொடரில் இந்திய அணிக்கு எதிராக கடைசியாக 1997ஆம் ஆண்டு இலங்கை அணி வெற்றி பெற்று இருந்த நிலையில் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு எதிராக தொடரை வென்றிருப்பது இலங்கை அணிக்கு ஒரு ஸ்பெஷலான தருணம் ஆகும்.

- Advertisement -