பதிரனாவை தூக்கிய சூப்பர் கிங்ஸ்.. சிஎஸ்கேவில் உறுதியாகிறதா 11 கோடி அக்ரிமெண்ட்? – வெளியான தகவல்கள்

0
201
Pathirana

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இலங்கை வேகப் பந்துவீச்சாளர் மதிஷா பதிரனாவை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் ஒப்பந்தம் செய்து அறிவித்திருக்கிறது. இதன் மூலமாக சூசகமாக ஐபிஎல் சம்பந்தமான ஒரு தகவலும் அடங்கி இருப்பதாக கருதப்படுகிறது.

தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இலங்கையின் ஸ்லிங் ஆக்சன் பவுலர் மதிஷா பதிரனா விளையாடி வருகிறார். மேலும் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் விருப்பத்துக்குரிய வீரராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸில் பதிரனா

இந்த நிலையில் தற்போது சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் ஒரு அணியாக இருக்கும் சூப்பர் கிங்ஸ் குழுமத்தின் அணியான ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு பதிரனா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

டி20 கிரிக்கெட்டில் இறுதி கட்ட ஓவர்களுக்கு ஸ்லிங் பந்துவீச்சு ஆக்சன் கொண்ட மலிங்கா போலான வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தேவை இருக்கிறது. இதன் காரணமாக பதிரனா டி20 கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராக உருவெடுத்திருக்கிறார். இவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் ஆதரவும் குறிப்பாக முன்னாள் கேப்டன் தோனியின் ஆதரவும் மிக அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே அணியில் பதிரனா தக்கவைக்கப்படுவாரா?

சிஎஸ்கே அணியில் முதல் வீரராக ரவீந்திர ஜடேஜா 18 கோடிக்கு தக்க வைக்கப்படலாம். இதற்கு அடுத்து 14 கோடிக்கு கேப்டன் ருதுராஜ் தக்கவைக்கப்படலாம். மூன்றாவது வீரருக்கான இடத்தில் பதிரனா இருக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் 11 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க : பும்ரா முதலிடம்.. ஜெய்ஸ்வால் உச்சம்.. கோலி ரிஷப் பண்ட் கலக்கல்.. ரோகித் கில் சரிவு.. ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்

தற்போது ஜோகனஸ் பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கின்ற காரணத்தினால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் பதிரனா தக்க வைக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இதற்கான சூசகமான அறிவிப்பாகவே இதை எடுத்துக் கொள்ளலாம் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -