உலக கிரிக்கெட்

இந்தியாவில் உலக கோப்பையில் அவமானப்பட்டோம்.. அதனால இப்ப திருப்பி செய்றோம் – தீக்சனா பேட்டி

நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக தீக்சனா இருந்தார். இந்த நிலையில் இலங்கை அணியின் சமீப கால சிறப்பான செயல்பாடுகள் பற்றி அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இலங்கை அணி கடந்த 10 ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட்டில் தங்களுடைய இடத்தை இழந்து வந்திருக்கிறது. இரண்டு உலக கோப்பையை வென்ற அணியாக இருந்தும், சில காரணங்களால் உள்நாட்டு கிரிக்கெட் சரிய அந்த அணியின் தேசிய கிரிக்கெட்டும் பெரிய சரிவை சந்தித்திருக்கிறது.

இலங்கை கிரிக்கெட்டின் மீள் எழுச்சி

இலங்கை அணி கடைசியாக நடைபெற்ற இரண்டு உலகக் கோப்பைகளில் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக மிக மோசமாக சுருண்டு தோல்வியை சந்தித்தது. இது இலங்கை அணியின் மீதான விமர்சனங்களை மிகக் கடுமையாக மாற்றியது.

மேலும் கடைசியாக டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் தகுதி பெற்று இருக்க, இலங்கை அணியால் இரண்டாவது சுற்று தகுதி பெற முடியவில்லை. ஆனால் அதற்குப் பிறகு உள்நாட்டில் இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய பிறகு சிறப்பான முறையில் விளையாடும் வருகிறது. நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தீக்சனா சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

இந்தியாவில் அவமானப்பட்டோம்

இது குறித்து பேசி இருக்கும் தீக்சனா கூறும் பொழுது “எங்களிடம் தற்போது நல்ல பெஞ்ச் வலிமை இருக்கிறது. மேலும் அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் சரிசமமான கலவையில் இருக்கிறார்கள். இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் அவமானமாக அமைந்தது. ஆனால் அதிலிருந்து நாங்கள் வெளியில் வந்து தற்போது வெல்ல தொடங்கி இருக்கிறோம். அணிக்குள் நல்ல சூழல் நிலவுகிறது”

இதையும் படிங்க : நான் ரோகித் கம்பீர்.. ஆஸிக்கு இந்த பிளானை ரெடி பண்ணி இருக்கோம்.. செம்ம ரிசல்ட் வந்திருக்கு – அபிஷேக் நாயர் பேச்சு

” பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எனது செயல்பாடு சிறப்பாக இருந்தது. எனக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போல ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது முடியவில்லை இப்பொழுது செய்து இருக்கிறேன். குசால் மெண்டிஸ் சிறப்பாக விளையாடினார். அவருக்கு சிங்கிள் தந்து என்னை அவுட் செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் நான் சரியான முறையில் பேட்டிங் செய்து தவறான பந்துகளை தண்டித்தேன். தற்பொழுது என்னுடைய நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. எங்கள் அணி சிறப்பாக விளையாடி வருகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by