சர்வதேச டி20 போட்டியில் டெத் ஓவரில் யாரும் எட்ட முடியாத சாதனையை, தன்வசப் படுத்திய இலங்கை கேப்டன் தசுன் ஷனங்கா – கதிகலங்கிய ஆஸ்திரேலியா

0
338

இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று நடந்து முடிந்தது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் நேற்று எஞ்சியுள்ள மூன்றாவது போட்டி நடைபெற்றது.

மூன்றாவது போட்டியில் முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 39 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பின்னர் விளையாடிய இலங்கை அணி 19.5வது மூவரில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷனங்கா 54* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

3 ஓவரில் ஆட்டத்தை திருப்பி போட்ட கேப்டன் ஷனங்கா

இலங்கை 17 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. அந்த அணி வெற்றி பெற இறுதி 3 ஓவர்களில் 59 ரன்கள் தேவைப்பட்டது.கேப்டன் ஷனங்கா 12 பந்துகளில் 6 ரன்கள் குவித்த நிலையில் இருந்தார். அதற்கு அடுத்த மூன்று ஓவர்களில் ( ஒரு பந்து மீதம் வைத்து ) இலங்கை அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

கடைசி 3 ஓவர்களில் 5 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் அடித்து இலங்கை அணியை வெற்றி பெற வைத்தார். முதல் 12 பந்துகளில் 6 ரன்கள் குவித்த அவர் அடுத்த 13 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். கேப்டன் ஷனங்கா ஆடிய ஆட்டத்தை கண்ட அவுஸ்திரேலிய அணி கதி கலங்கி விட்டது என்றே சொல்லலாம்.டெத் ஓவர்களில் (16 முதல் 20 ஓவர் வரையில்) நேற்று ஷனங்கா 50 ரன்கள் குவித்துள்ளார்.

ஓவர் வாரியாக டெத் ஓவர்களில் ஷனங்கா ரன் குவித்த விவரம் :

17வது ஓவர் – 2 ரன்கள்
18வது ஓவர் – 21 ரன்கள்
19வது ஓவர் – 12 ரன்கள்
20வது ஓவர் – 15 ரன்கள்

இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில், குறிப்பாக சேஸிங் செய்கையில் 50 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையை இலங்கை கேப்டன் ஷனங்கா நேற்று படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.