நிஜமாவே இந்தியாவுக்கு இந்த ரன் போதும்னு நினைச்சேன்.. இப்ப எனக்கு ஒரு நல்ல பிரச்சனை வந்திருக்கு – அசலங்கா பேட்டி

0
1222
Asalanga

இலங்கை அணி இன்று இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த சிறப்பான வெற்றிக்கான காரணங்கள் குறித்து இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பேசியிருக்கிறார்.

முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் இலங்கை அணியின் கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இலங்கை அணிக்கு இந்த முறை துவக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாடோ 62 பந்தில் 40 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு தாக்குப் பிடித்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து குசால் மெண்டிஸ் 42 பந்தில் 30 ரன்கள், வெல்லாலகே 35 பந்தில் 39 ரன்கள், கமிந்து மெண்டிஸ் 44 பந்தில் 40 ரன்கள் எடுத்தார்கள். இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 மற்றும் குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் 97 ரன்கள் வந்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா இந்த முறையும் மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

ஆனால் இதற்குப் பிறகு அக்சர் படேல் 44 பந்தில் 44 ரன்கள் எடுக்க, கில் தன் பங்குக்கு 35 ரன்கள் எடுத்து வெளியேற, மற்ற யாரும் விராட் கோலி உட்பட சரியாக பேட்டிங் செய்யவில்லை. இறுதியாக இந்திய அணி 208 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி அபாரமான முறையில் செயல்பட்டு 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : நாங்க பேட்டிங் செஞ்சத பார்க்கவே விரும்பல.. ஆனா அந்தவொரு விஷயத்தை பத்தி டீம்ல பேசுவேன் – ரோகித் சர்மா பேச்சு

இந்த சிறப்புமிக்க வெற்றிக்கு பிறகு பேசிய இலங்கை கேப்டன் சரித் அசலங்கா “இந்த ஆடுகளத்தில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து எடுத்த ரன்னில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். 240 ரன்கள் போதும் என நினைத்தேன்.இப்பொழுது வாண்டர்சே வந்து சிறப்பாக விளையாடி இருப்பதால் அடுத்தடுத்து யாரை தேர்வு செய்வது என்பது தலைவலியாக இருக்கும். ஆனால் ஒரு கேப்டனாக எனக்கு இப்படியான நல்ல பிரச்சனைகள் இருக்க வேண்டும். அவரிடமிருந்து நம்ப முடியாத ஒரு நல்ல ஸ்பெல் வந்தது. நான் முதலில் ஒரு பேட்ஸ்மேன் நான் ரன்கள் எடுக்க வேண்டும். அடுத்து நான் பந்துவீச்சில் ஏதாவது பங்களிப்பு செய்வேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -