நாங்க பேட்டிங் செஞ்சத பார்க்கவே விரும்பல.. ஆனா அந்தவொரு விஷயத்தை பத்தி டீம்ல பேசுவேன் – ரோகித் சர்மா பேச்சு

0
839
Rohit

இந்திய அணி இன்று இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருக்கிறது. இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி இந்திய அணி மட்டுமல்லாத ரசிகர்களை பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு அவிஷ்கா பெர்னாடோ 62 பந்தில் 40 ரன்கள், கமிந்து மெண்டிஸ் 44 பந்தில் 40 ரன்கள் எடுத்தார்கள். இலங்கையணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 44 பந்தில் 64 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து அக்சர் படேல் 44 பந்தில் 44 ரன்கள் எடுத்தார். ஆனால் இவர்கள் இருவரை தவிர பேட்டிங் வரிசையில் வேறு யாரும் சரியாக விளையாடவில்லை. இந்திய அணி இறுதியாக 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வி குறித்த கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது “ஒரு போட்டியில் தோல்வி என்றாலும் அது அணியில் உள்ள அனைவருக்கும் வலிக்கவே செய்யும். இது ஆட்டம் மாறிய பத்து ஓவர்கள் பற்றியது மட்டும் கிடையாது. நாங்கள் நிலையான பேட்டிங் விளையாடாதது வருத்தம் அளிக்கிறது.இது கொஞ்சம் எங்களுக்கு ஏமாற்றம் தருகிறது. ஆனால் கிரிக்கெட்டில் இதெல்லாம் நடக்க கூடியதுதான்.

- Advertisement -

உங்களுக்கு முன்னால் இருக்கும் நிலைமைகளை நீங்கள் மாற்றி அமைக்க வேண்டும். ரைட் லெப்ட் காம்பினேஷன் தேவை என்கின்ற காரணத்தினால் நாங்கள் முன்கூட்டியே சிவம் துபேவை அனுப்பினோம். இதனால் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது எளிதாக இருக்கும் என நினைத்தோம். நான் 65 ரன்கள் எடுத்ததற்கு காரணம் நான் அதிரடியாக விளையாடும் முறைதான். நான் இதை மாற்றிக் கொள்ளப் போவது கிடையாது. மேலும் பவர் பிளேவில் முடியும் வரை எடுக்க வேண்டி இருந்தது. பிறகு பந்து தேய்ந்தால் கடினம் ஆகிவிடும்.

இதையும் படிங்க : 111 ரன்கள் 10 விக்கெட்.. 11 வருடங்களுக்குப் பிறகு இலங்கை அணி சாதனை.. இந்திய அணி மோசமான பேட்டிங்கால் தோல்வி

நீங்கள் போட்டியில் செல்லவில்லை என்றால் எப்போதும் ஏமாற்றம் ஆகத்தான் இருக்கும். ஆனால் நான் என்னுடைய இன்டென்ட்டில் மாற்றம் செய்து கொள்ளப் போவது கிடையாது. மேலும் நாங்கள் விளையாடிய விதம் குறித்து நான் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. ஆனால் எங்களுடைய மிடில் ஆர்டர் பேட்டிங் செய்யும் முறை பற்றி நாங்கள் நிச்சயம் பேசுவோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -