நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பரபரப்பான கட்டத்தில் குசால் மெண்டிஸ் தனி ஒரு வீரராக இலங்கை அணியை விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்து தொடரையும் கைப்பற்ற வைத்தார்.
இலங்கைக்கு நியூசிலாந்து அணி வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாட சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை சமன் செய்தது. இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியை தோற்று இருந்த நியூசிலாந்து இரண்டாவது போட்டியையும் தோற்று தொடரை இழந்தது.
ஆச்சரியம் தந்த இலங்கை அணியின் முடிவு
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்வதற்கு பதிலாக பந்து வீசுவதாக அறிவித்து ஆச்சரியப்படுத்தியது. மேலும் மழையின் காரணமாக 47ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. நியூசிலாந்து அணிக்கு சாப்மேன் 81 பந்தில் 76 ரன்கள், மிட்ச் ஹே 62 பந்தில் 49 ரன்கள் எடுத்தார்கள். இலங்கை அணியின் பந்துவீச்சில் தீக்சனா மற்றும் வாண்டர்சே இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
குசால் மெண்டிஸ் ஸ்பெஷல் இன்னிங்ஸ்
இலங்கை அணி குறைந்த இலக்கை நோக்கி விளையாடினாலும் பேட்டிங் செய்வதற்கு கடினமான நிலையில் விக்கெட்டுகளை தொடர்ந்து கொடுத்து வந்தது. அந்த அணியின் பதும் நிஷாங்கா 28, அவிஷ்கா பெர்னாடோ 5, கமிந்து மெண்டிஸ் 0, கேப்டன் அசலங்கா 13, சமரவிக்கிரமா 8, ஜனித் லியாங்கே 22, வெல்லாலகே 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இலங்கை அணி முதலில் 93 ரண்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து 163 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்தது. இதைத்தொடர்ந்து குசால் மெண்டிஸ் தீக்சனா உடன் இணைந்து 59 பந்துகளில் 47 ரன்கள் வெற்றி பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இறுதி வரை ஆட்டம் இழக்காத குசால் மெண்டிஸ் 102 பந்தில் 6 பவுண்டரி உடன் 74 ரன்கள் எடுத்து இலங்கை அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். இவருடன் தீக்சனா 44 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க : ரோஹித்துக்கு இதான் கடைசினு நல்லா தெரியும்.. அவருடைய இடத்துல நான் இருந்தா கண்டிப்பா இதை செய்வேன் – கங்குலி பேட்டி
முதல் ஒருநாள் போட்டியில் வென்றிருந்த இலங்கை அணி இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வென்று தொடரையும் கைப்பற்றியது. இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்ற பிறகு இலங்கை அணியின் செயல்பாடு சிறப்பாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.






