ரோஹித்துக்கு இதான் கடைசினு நல்லா தெரியும்.. அவருடைய இடத்துல நான் இருந்தா கண்டிப்பா இதை செய்வேன் – கங்குலி பேட்டி

0
100

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வருகிற 22ஆம் தேதி முதல் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ள நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா பங்குபெற மாட்டார் என்ற தகவல் பரவி வருகிறது.

இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ரோஹித்

இந்திய அணி ஆஸ்திரேலியாலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா தனக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதால் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கு பெற மாட்டார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அவருக்கு பதிலாக இந்திய அணிக்கு பும்ரா கேப்டனாக தலைமை தாங்குவார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ரோகித் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். ரோகித் சர்மாவின் இடத்தில் நான் இருந்திருந்தால் முதல் டெஸ்ட் போட்டியில் நிச்சயம் பங்கு பெறுவேன் என்றும் ஆஸ்திரேலியா தொடரின் முக்கியத்துவம் குறித்தும் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுதான் கடைசி ஆஸ்திரேலிய தொடர்

இது குறித்து அவர் கூறும் பொழுது “ரோஹித் சர்மாவின் தலைமை இந்திய அணிக்கு மிகவும் தேவை என்பதால், அவர் விரைவாக இந்திய அணியுடன் இணைவார் என்று நம்புகிறேன். ரோகித் சர்மாவின் மனைவி வெள்ளிக்கிழமை ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இருப்பினும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க நிறைய நேரம் இருக்கிறது. நான் அவரது நிலையில் இருந்திருந்தால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்று நினைப்பேன்.

இதையும் படிங்க:நம்பவே முடியல.. எனக்கும் பும்ராவுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா.. டி20யில் அரிய நிகழ்வு – தப்ரைஸ் ஷம்சி பேட்டி

இது ஒரு பெரிய டெஸ்ட் தொடர் இந்த சுற்றுப்பயணத்திற்குப் பிறகு ரோகித் சர்மா திரும்ப ஆஸ்திரேலியா செல்ல மாட்டார். ரோஹித் சர்மா ஒரு அற்புதமான கேப்டன், இந்தியாவுக்கு தொடக்கத்தில் இருந்தே அவரது தலைமை தேவை. நான் அவரை டெஸ்ட் கேப்டனாக விரும்பவில்லை. அவர் ஒயிட்பால் ஃபார்மேட்டில் முன்னணியில் இருந்தார். பணிச்சுமை மேலாண்மையில் பிரச்சனை இருந்தது ஆனால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. மேலும் டெஸ்ட் கேப்டன் ஆவதற்கு முன்பாக ஓய்வு பெற வேண்டாம் என்று அவரிடம் கூறினேன். அவர் தற்போது நிறைய சாதித்து வருகிறார்” என்று கூறுகிறார்.

- Advertisement -