4 ஓவரில் மேட்சை முடித்த இலங்கை.. நியூசிலாந்து முதல் டெஸ்டில் தோல்வி.. இந்திய அணிக்கு WTC பைனலுக்கு சாதகம்

0
927
Srilanka

இலங்கை அணி உள்நாட்டில் வைத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 305 ரன்கள் எடுத்தது. கமிந்து மெண்டிஸ் 114 ரன்கள் எடுத்தார். வில்லியம் ஓரூர்க் 5 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து நியூசிலாந்து அணி 340 ரன்கள் எடுத்தது. டாம் லாதம் 70 ரன்கள் அடித்தார். பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸ் அபாரம்

இதைத் தொடர்ந்து 35 ரன்கள் பின்தங்கி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணிக்கு கருணரத்தினே 83, ஏஞ்சலோ மேத்யூஸ் 50 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 309 ரன்கள் எடுத்தது. அஜாஷ் பட்டேல் 6 விக்கெட் கைப்பற்றினார். நியூசிலாந்து அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நான்காவது நாளின் முடிவில் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் வெற்றிக்கு 68 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இரண்டு விக்கெட் கைவசம் இருந்தது. அப்போது களத்தில் இரச்சின் ரவீந்தரா 91 ரன்கள் மற்றும் அஜாஸ் படேல் ரன்கள் ஏதும் எடுக்காமல் களத்தில் நின்றார்கள்.

- Advertisement -

3.4 ஓவரில் முடிந்த போட்டி

இதை தொடர்ந்து இன்று பரபரப்பான நிலையில் ஐந்தாவது நாள் போட்டி நடைபெற்றது. இன்றைய நாளில் ரச்சின் ரவீந்தரா மேற்கொண்டு ஒரு உடன் மட்டுமே எடுக்க அவரை 92 ரன்னில் பிரபாபாத் ஜெயசூர்யா ஆட்டம் இழக்க செய்தார். அடுத்து வந்த வில்லியம் ரூர்க்கையும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற்றினார். நியூசிலாந்து அணி 211 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது. பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : அஸ்வின் கிடையாது.. இந்த பையன் ஆடினது தான் இந்த டெஸ்ட்ல பெஸ்ட்.. காரணம் இதான் – அஜய் ஜடேஜா தேர்வு

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. மூன்றாவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து ஆஸ்திரேலியா அணியுடன் ஏற்கனவே விளையாடி முடித்துவிட்டது. அடுத்து இந்தியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. எனவே நியூசிலாந்து நேரடியாக இந்திய அணிக்கு சவால் கொடுக்க முடியும்.இப்படியான நிலையில்தான் நியூசிலாந்து அணியை இலங்கை வீழ்த்தி இருக்கிறது. இது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதில் சாதகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -