இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இலங்கை அணியை வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன் சுற்றுக்கு தயாராகும் விதமாக தற்போது அனைத்து அணிகளும் மிகத்தீவரமாக டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இலங்கை அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே தோல்வியை தழுவி இருந்தது. எனவே இந்த சூழ்நிலையில் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இறங்கிய இலங்கை அணி இங்கிலாந்தை முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் குவிக்க விட்டது.
அதற்குப் பிறகு முதல் இன்னிங்ஸ் களம் இறங்கிய இலங்கை அணி 263 ரன்களுக்கு ஆட்டம் இழந்தாலும் அதற்குப் பிறகு இலங்கை அணியின் மிகச் சிறப்பான முறையில் பந்துவீசி இங்கிலாந்து அணியை இரண்டாவது இன்னிங்ஸில் 156 ரன்கள் மட்டுமே குவிக்க விட்டது. இதில் இலங்கை அணியின் பெர்னான்டோ மற்றும் லகிரு குமாரா சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணியை சாய்த்தனர். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி 2 விக்கெட் மட்டுமே இழந்து 219 ரன்கள் குவித்து எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெற்றது.
இங்கிலாந்து மண்ணில் இலங்கை அணிக்கு இது நான்காவது வெற்றியாகும். இதன் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தில் இருந்து தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இலங்கை அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த போதிலும் பெரிதான பாதிப்பு எதுவும் நிகழவில்லை.
இதில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை விட ஒரு இடம் கீழாக ஆறாவது இடத்தில் இருக்கிறது. இதுவரை 16 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி எட்டு போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வி மற்றும் ஒரு போட்டி டிரா என இருக்கிறது அதுவே இலங்கை அணி எட்டு போட்டிகளில் 4ல் வெற்றியும் 4ல் தோல்வியையும் தோல்வியுள்ளது.
இதையும் படிங்க:அடித்தது லக்.. ஆஸ்திரேலியா போகும் முஷீர் கான்.. மெகா பிளானில் பிசிசிஐ.. வெளியான தகவல்கள்
இதன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி ஒன்பது போட்டிகளில் ஆறு போட்டிகள் வெற்றி, இரண்டு போட்டிகள் தோல்வி மற்றும் ஒரு போட்டி டிரா என 74 புள்ளிகளோடு 68.52 சதவீத அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா அணி 12 போட்டிகளில் 8ல் வெற்றியும் மூன்று போட்டிகளில் தோல்வி மற்றும் ஒரு ட்ரா என இருக்கிறது.