அடித்தது லக்.. ஆஸ்திரேலியா போகும் முஷீர் கான்.. மெகா பிளானில் பிசிசிஐ.. வெளியான தகவல்கள்

0
608
Musheer

இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் சர்ப்ராஸ் கான் தம்பி 19 வயதான முஷீர் கான் பலரது கவனத்தையும் கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா செல்வார் என்கின்ற ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது.

மும்பை மாநில அணிக்காக அறிமுகமாகி ரஞ்சி கால் இறுதிப் போட்டியில் இரட்டை சதம் என ஆரம்பித்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் அரை சதங்கள் எடுத்து மும்பை அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். அவருடைய பேட்டிங் மிகவும் புத்திசாலித்தனமான ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

துலீப் டிராபி 181

இந்த நிலையில் தற்பொழுது நடைபெற்று வரும் துலீப் டிராபி தொடரில் இந்திய அணிக்கு எதிராக இந்திய அணிக்கு விளையாடி 181 ரன்கள் குவித்தார். பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் தனி ஒரு வீரராக இவ்வளவு பெரிய ரன்களை அவர் எடுத்தது தேர்வாளர்களுக்கு பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டது.

மேலும் முஷீர் கான் உள்நாட்டு கிரிக்கெட்டில் எல்லா வடிவத்திலும் பந்து வீசக்கூடிய இடதுகை சுழல் பந்துவீச்சாளராகவும் இருக்கிறார். இவரால் பந்துவீச்சில் நல்ல பங்களிப்பை கொடுக்க முடிகிறது. இதன் காரணமாக எதிர்கால இந்திய கிரிக்கெட்டில் இவருக்கு இப்பொழுதே எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா பயணம்

இந்த நிலையில் இந்திய அணி நவம்பர் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதற்கு முன்பாக இந்திய ஏ அணி அங்கு சென்று விளையாடுகிறது. இதில் சில இந்திய வேகப்பந்துவீச்சாளர்களும், சில டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் வீரர்களும் ஆஸ்திரேலியா செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : எங்கள தோற்கடிக்கிறது இந்தியர்களுக்கு பெரிய சந்தோஷம்.. ஆனா இத மட்டும் மறந்துடாதிங்க – ஆஸி உஸ்மான் கவாஜா பேட்டி

இந்த நிலையில் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் முஷீர் கானையும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்போது ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய ஏ அணியில் இணைக்க போகிறார்கள் என்று நம்பத் தகுந்த செய்தி நிறுவனங்களில் செய்திகள் வந்திருக்கிறது. ஒரு பக்கம் அண்ணன் சர்பராஸ் கானுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்திருப்பதும், தம்பி முஷீர் கானுக்கு இந்திய ஏ அணியில் வாய்ப்பு கிடைப்பதும் பெரிய விஷயமாக அமைந்திருக்கிறது!

- Advertisement -