BANvsSL.. 57-5 to 259-5.. இலங்கை அணியை காப்பாற்றிய ஜோடி.. பங்களாதேஷ் முதல் டெஸ்டில் திணறல்

0
118
Srilanka

இலங்கை அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில், முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. இதற்கடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் அணி கைப்பற்றியது.

இந்த நிலையில் இன்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி தொடங்கியது. மேலும் இரு அணிகளுக்கும் இடையே உலகக் கோப்பை முதல் களத்தில் உரசல் மிக அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இதனால் இரு அணி வீரர்களும் பதிலடி என்ற பெயரில் மாறி மாறி மோதி கொள்கிறார்கள்.

- Advertisement -

இப்படியான சூழலில் இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. போட்டியின் ஆரம்பம் இலங்கை அணிக்கு மிகவும் மோசமாக அமைந்தது. இலங்கை அணியின் நிஷான் மதுஷ்கா 2, திமுத் கருணரத்னே 17, குசால் மெண்டிஸ் 16, ஏஞ்சலோ மேத்யூஸ் 5, தினேஷ் சண்டிமால் 9 என முதல் 5 விக்கெட்டுகள் 17 ரன்களுக்கு விழுந்துவிட்டது.

இலங்கை அணியை மீட்ட ஜோடி

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை அணி இருந்த பொழுது தனஞ்செய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் இருவரும் ஜோடி சேர்ந்து மெல்ல மெல்ல இலங்கை அணியை மீட்ட ஆரம்பித்து அரை சதம் அடித்தார்கள். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை அணி 200 ரன்களை கடந்தது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் இருவரும் சதம் அடித்தார்கள். ஆறாவது விக்கெட்டாக கமிந்து மெண்டிஸ் 102 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி மொத்தம் 202 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இலங்கை அணியை காப்பாற்றியது. இவரைத் தொடர்ந்து உடனே அதே 102 ரன்கள் எடுத்து தனஞ்செய டி சில்வாவும் வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து பிரபாத் ஜெயசூர்யா 1, விஷ்வா பெர்னாடோ 9, லகிரு குமாரா 0, ரஜிதா 6* ரன்கள் எடுக்க, இலங்கை அணி 68 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் பங்களாதேஷ் தரப்பில் காலித் அஹமத் மற்றும் நாஹித் ராணா இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

இதையும் படிங்க : 2023 செஞ்சதே போதும்.. 2024 டி20 உலக கோப்பைக்கு வேண்டாம் – தோனி மீது கம்பீர் மறைமுக விமர்சனம்

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய பங்களாதேஷ் அணிக்கு ஜாகிர் ஹாசன் 9, நஜீபுல் சாந்தோ 5, மொமினுல் ஹக் 5 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினார்கள். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் அணி 32 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. இலங்கை தரப்பில் விஷ்வா பெர்னாடோ 2 மற்றும் கசுன் ரஜிதா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கை அணி கொஞ்சம் முன்னிலையில் இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையே இருக்கும் பகையில் இந்த தொடரை இலங்கை வெல்லுமா? என்று பார்க்க வேண்டும்.