இலங்கை தனஞ்செயா சதம்..பாபர் அசாம் ஏமாற்றம்..பரபரப்பான கட்டத்தில் இலங்கை பாகிஸ்தான் முதல் டெஸ்ட்!

0
2244

பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணி களுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது . அந்த அணியின் துவக்க வீரர்கள் சரிவை சந்தித்தபோதும் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தனஞ்செயா டிசில்வா அணியை சரிவிலிருந்து மீட்டனர் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் இலங்கை அணி 242 ரன்களுக்கு ஆரம்பிக்கெட்டுகளை இழந்திருந்தது . தனஞ்செயா 94 ரன்கள் உடன் களத்தில் இருந்தார்.

- Advertisement -

இன்றைய நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் இலங்கை அணி 300 ரன்களுக்கு மேல் குளித்தது. நேற்று சிறப்பாக ஆடிய தனஞ்செயா டிசில்வா இன்று தனது சதத்தை நிறைவு செய்தார். இந்தப் போட்டியில் சதம் எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது பத்தாவது சதத்தை நிறைவு செய்தார்.

இறுதிக்கட்ட வீரர்களின் துணையுடன் இலங்கை அணி 312 ரன்களை எட்டியது. சிறப்பாக ஆடிய தனஞ்செயா டிசில்வா 122 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 3 சிக்ஸர்களும் 12 பௌண்டரிகளும் அடங்கும். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஷாகின் அப்ரிதி நசீம் ஷா மற்றும் அப்ரார் அஹமத் ஆகியோர் கலாம் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து ஆட வந்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது அந்த அணியும் இலங்கை அணியை போலவே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பாபர் அசாம் இமாம் உல் ஹக் போன்ற வீரர்கள் ஆட்டம் விளக்க 75 ரன்கள் விக்கெட்டுகளை இழந்திருந்தது.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் கம்பேக் கொடுத்த சர்பராஸ் கான் 13 ரண்களில் அவுட் ஆகிய ஏமாற்றினார் இதனால் பாகிஸ்தான் 101 ரன்கள் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது . இந்த நிலையில் ஆறாவது விக்கெட் ஜோடி சேர்ந்த சவுத் ஷகீல் மற்றும் சல்மான் அகா ஆகியோர் அந்த அணியை சரிவிலிருந்து மீட்டனர் .

இவர்கள் இருவரும் ஆறாவது விக்கெட் ஜோடியாக 112 கலை சேர்த்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர் . பாகிஸ்தான் அணி 221 ரன்களுக்கு ஐந்து விக்கெட் களை இழந்திருந்த போது மழை குறுக்கிட்டதால் இரண்டாம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது . இன்றைய ஆட்ட நேர முடிவில் சவுத் ஷகீல் 69 ரன்கள்டனும் சல்மான் அகா 61 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணியின் பந்து வீச்சில் பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளையும், ரஜிதா மற்றும் ரமேஷ் மெண்டிஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கின்றனர்.