602 ரன்ஸ்.. 3 சதம்.. 2 மெண்டிஸ்கள் அபார ஆட்டம்.. நியூசிக்கு இலங்கை அணி செக்.. காலே 2வது டெஸ்ட்

0
223
Kamindu

நியூசிலாந்து அணிக்கு எதிராக இலங்கை காலே மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 602 ரன்கள் குவித்து டிக்ளர் செய்திருக்கிறது.

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கும் நிலையில், இந்த டெஸ்ட் போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்று மீண்டும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து அசத்தியிருக்கிறது. ஏறக்குறைய தொடரை வெல்வதற்கான வலிமையான அடித்தளத்தை உருவாக்கி விட்டது.

- Advertisement -

இரண்டாவது டெஸ்ட் முதல் நாள்

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு தினேஷ் சண்டிமால் 116 ரன்கள் எடுத்தார். துவக்க ஆட்டக்காரர் கருணரத்தினே 46 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 88 ரன்கள் கேப்டன் தனஞ்செய டி சில்வா 44 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்த நிலையில் அபாரமாக விளையாடிய கமிந்து மெண்டிஸ் எட்டாவது டெஸ்ட் போட்டியில் 13 இன்னிங்ஸ்களில் ஐந்தாவது சதத்தை அடித்து அசத்தினார்.

- Advertisement -

மெண்டிஸ்கள் கலக்கல்

இதைத்தொடர்ந்து கமீந்து மெண்டிஸ் மற்றும் குசால் மெண்டிஸ் இணைந்து அதிரடியாக ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார்கள். இதன் காரணமாக இலங்கையணி 500 ரன்களை தாண்டி 600 ரன்களையும் தொட்டது. இந்த ஜோடி ஆட்டம் இழக்காமல் 271 பந்துகளில் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இலங்கை அணிக்கு கமிந்து மெண்டிஸ் 250 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 182 ரன்கள், குசால் மெண்டிஸ் 149 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 106 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார்கள். இலங்கை அணி 163.4 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 602 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் டிக்ளர் செய்தது. நியூசிலாந்து தரப்பில் கிளன் பிலிப்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையும் படிங்க : டிஆர்எஸ் மீது சந்தேகம்.. பங்களாதேஷ் தமீம் இக்பால் கேள்வி .. ரவி சாஸ்திரி சரியான பதிலடி.. 2வது இந்திய டெஸ்ட்

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் டாம் லாதம் 2, டெவோன் கான்வே 9 ரன்களில் ஆட்டம் இழந்தார்கள். இரண்டாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 22 எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து 580 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்த இலங்கை சிறப்பான அடித்தளத்தை அமைத்திருக்கிறது.

- Advertisement -