இந்திய கிரிக்கெட்

இந்தியாவுக்கு 230 ரன்னே போதும்னு நினைச்சேன்.. நான் அந்த ஓவரை வீச காரணமே இதுதான் – அசலங்கா பேட்டி

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பரபரப்பான முறையில் நடந்து வெற்றி தோல்வி இல்லாமல் டை ஆனது. கடைசியில் மிகச்சிறப்பாக பந்து வீசி விக்கெட் கைப்பற்றி போட்டியை டை ஆகிய இலங்கை கேப்டன் சரித் அசலங்கா போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா 75 பந்தில் 56 ரன்கள், லோயர் மிடில் ஆர்டரில் வந்த துனித் வெல்லாலகே சிறப்பான முறையில் விளையாடி 65 பந்தில் ஆட்டம் இழக்காமல் 67 ரன்கள் எடுத்தார்கள். இலங்கை அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் அக்சர் படேல் மற்றும் அர்ஸ்தீப் சிங் இருவரும் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோஹித் சர்மா 47 பந்தில் 58 ரன் எடுத்து நல்ல துவக்கம் தந்தார். ஆனால் ஒருபுறம் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. கீழ் வரிசையில் கே எல் ராகுல் 31 ரன்கள், அக்ச்சர் படையில் 33 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்த நிலையில் ஆட்டம் பரபரப்பான கட்டத்திற்கு சென்றது.

இதைத்தொடர்ந்து எட்டாவதாக பேட்டிங் வரிசையில் வந்த அதிரடி வீரர் சிவம் துபே 24 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அப்பொழுது வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் கைவசம் ஒரு விக்கெட் இருந்தது. அந்த நிலையில் பதினொன்றாவதாக பேட்டிங் செய்ய வந்த அர்ஸ்தீப் சிங் சந்தித்த முதல் பந்தில் ஆட்டம் இழக்க போட்டி டை ஆனது. பரபரப்பான இந்தப் போட்டியில் இலங்கையின் பந்துவீச்சில் அசலங்கா மற்றும் ஹசரங்கா இருவரும் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

இந்த போட்டியில் கடைசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை டை ஆகிய இலங்கை கேப்டன் சரித் அசலம் பேசும் பொழுது “நாங்கள் 230 ரன்கள் எடுத்தால் போதும் என்று நினைத்தோம். அவர்களை கட்டுப்படுத்த நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும். போட்டியின் இரண்டாம் பகுதியில் மின் விளக்குகள் எரிய ஆரம்பித்ததும் இந்திய அணிக்கு பேட்டிங் செய்வது எளிதாக மாறியது. அவர்களது பேட்டுக்கு பந்து நன்றாக வந்தது.

இதையும் படிங்க : 220 ரன்தான் எங்க பிளான்.. இந்த 2 பேர்தான் நாங்க தோக்காம இருக்க காரணம் – ஆட்டநாயகன் வெல்லாலகே பேட்டி

இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்த காரணத்தினால்தான் அந்த ஓவரை நான் வீசலாம் என்று நினைத்தேன். ஏனென்றால் ஆடுகளத்தில் பந்து நன்றாக சுழன்று திரும்பியது. மேலும் இரண்டாம் பகுதியில் நாங்கள் காட்டிய ஆற்றல் மற்றும் உத்வேகம் மிக சிறப்பாக இருந்தது. இந்த போட்டியில் பேட்டிங்கில் எங்கள் பக்கம் பதும் நிஷாங்கா மற்றும் துனித் வெல்லாலகே இருவரும் சிறப்பாக விளையாடினார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts