பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தங்களது சொந்த மண்ணில் சரியான பதிலடி கொடுத்திருக்கிறது.
தற்போது பங்களாதேஷ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி பிரமாண்டரன் குவித்து டிரா செய்தது. மேலும் அந்த அணியின் கேப்டன் நஜ்முல் சாந்தோ இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்திருந்தார்.
சுருண்ட பங்களாதேஷ்
இந்த முறை இரண்டாவது போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் மீண்டும் பேட்டிங் தேர்வு செய்தது. இந்த முறை பேட்டிங் செய்வதற்கு சாதகம் இருந்த பொழுதிலும் கூட இலங்கை அணியின் சிறப்பான பந்து வீச்சால் பங்களாதேஷ் அணி 79.3 ஓவரில் 247 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் மூத்த வீரர் அஸீதா பெர்னாடோ 3, சோனல் தினுஷா 3, விஷ்வா பெர்னாடோ 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். சொந்த மண்ணில் மேலும் நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் முதல் தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி அணி பேட்டிங் செய்ய வந்தது.
பதும் நிசாங்கா அசத்தல்
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் லகிரு உதாரா 65 பந்தில் 40 ரன்கள், தினேஷ் சந்திமால் 153 பந்துகளில் 193 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய பிரபாத் ஜெயசூர்யா 5 ரன் உடன் களத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : தோனி கூட ரிஷப் பண்ட்ட கம்பேர் பண்றது அநியாயம்.. இந்த மெகா பிளேயர் கூட பண்ணுங்க – அஸ்வின் கோரிக்கை
அதே சமயத்தில் இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய பதும் நிசாங்கா இரண்டாவது நாள் முடிவில் ஆட்டம் இழக்காமல் சதம் அடித்து 238 பந்துகளில் 18 பவுண்டரிகள் உடன் 146 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி ஆதிக்கம் செலுத்தியதற்கு, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளிலேயே இலங்கை அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்து சிறப்பான பதிலடி கொடுத்திருக்கிறது. மேலும் இந்த போட்டியில் வென்று தொடரையும் கைப்பற்ற கூடிய அருமையான வாய்ப்பையும் உருவாக்கி இருக்கிறது.






