தோனி கூட ரிஷப் பண்ட்ட கம்பேர் பண்றது அநியாயம்.. இந்த மெகா பிளேயர் கூட பண்ணுங்க – அஸ்வின் கோரிக்கை

0
116
Dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தோனி உடன் ரிஷப் பண்ட்டை ஒப்பிடுவது தவறானது எனவும், அவரை வேறு ஒரு பெரிய வீரருடன் ஒப்பிட வேண்டும் எனவும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறி இருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் ரிஷப் பண்ட் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன் ஆக வர முடியும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும் ரிஷப் பண்ட் தன்னை ஒரு பேட்ஸ்மேனாக கருதி முழு பொறுப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.

- Advertisement -

தோனி – ரிஷப் பண்ட் ஒப்பீடு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ளும் பொழுது தற்போது இந்தியாவிற்கு மிகவும் வெற்றிகரமான விக்கெட் கீப்பிங் டெஸ்ட் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் இருக்கிறார். தோனி தன்னுடைய ஒட்டுமொத்த சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஆறு சதங்கள் அடித்து இருக்க, தற்போது ரிஷப் பண்ட் அதை தாண்டி ஏழு சதங்கள் அடித்து விட்டார். மேலும் ஏழு முறைக்கு மேல் 90 ரண்களில் ஆட்டம் இழந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரிஷப் பண்ட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் பொழுது இந்தியாவின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பிங் டெஸ்ட் பேட்ஸ்மேனாக மட்டும் இல்லாமல், உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆகவும் இருப்பார் என பலரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தோனி உடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட்டை ஒப்பிடுவது தவறானது என ரவிச்சந்திரன் அவர்களின் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் இவர் மாதிரியானவர்

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “தோனி உடன் ரிஷப் பண்ட்டை ஒப்பிடுவது நியாயமானது கிடையாது. தோனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு முறை கூட ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்தது இல்லை. தோனி ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன். ஆனால் ரிஷப் பண்ட் பேட்டிங் விக்கெட் கீப்பர். இந்த இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது”

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் கூட முதல் அறிமுகமே மோசம்.. உதவிய கூட ஏற்காம.. சொன்ன பதில் ஆச்சரியம் – அஜய் ஜடேஜா பேச்சு

“ரிஷப் பண்ட்டை நியாயமாக விராட் கோலி போன்ற பெரிய பேட்ஸ்மேன் உடன் ஒப்பிட வேண்டும். அவர் தற்பொழுது ஒரு முக்கிய பேட்ஸ்மேன். ரிஷப் பண்ட் பேட்டிங் செய்யும்பொழுது அவருடைய திறமையும் டைமிங்கும் வேறு லெவலில் இருக்கும். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவருடைய பேட்டிங் டைமிங்கை நீங்களே பாருங்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -