இலங்கை 50 ரன்னில் ஆல் அவுட்.. சீறிய சிராஜ்.. இந்தியா வரலாற்று சாதனை.. ஆசிய கோப்பை பைனல்!

0
1178
ICT

இந்திய அணி இன்று ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி எதிராகப் பல சாதனைகளை பந்துவீச்சில் மட்டுமே நிகழ்த்தி அட்டகாசப்படுத்தி இருக்கிறது.

இந்தப் போட்டி ஆரம்பிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு மழை குறுக்கிட்டு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு டாஸ் நிகழ்வில் வெற்றி பெற்ற இலங்கை கேப்டன் முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்து இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணியின் பேட்ஸ்மேன்களை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் வதம் செய்து விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். அவர்களுக்கு ஆடுகளத்தில் பந்து என்ன செய்துசெய்து கொண்டிருக்கிறது என்றே புரியவில்லை.

ஒரு முனையில் பும்ரா தன்னுடைய மிகச் சிறப்பான வேகப்பந்துவீச்சில் இலங்கை பேட்ஸ்மேன்களை சந்தேகத்திலேயே வைத்திருக்க, இன்னொரு ஓவருக்கு வந்த முகமது சிராஜ் அதிரடி தாக்குதலை தொடுத்து இலங்கையை முடக்கி விட்டார்.

முகமது சிராஜ் இந்த போட்டியில் தான் வீசிய முதல் 16 பந்துகளில் 5 விக்கெட் கைப்பற்றினார். பும்ரா ஆட்டத்தின் முதல் ஓவரில் ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தார். முதல் 10 ஓவர்களில் இலங்கை ஆறு விக்கெட்டுகளை இழந்து விட்டது.

- Advertisement -

இதற்கு அடுத்து கேப்டன் ரோஹித் சர்மா முகமது சிராஜிக்கு இன்னொரு ஓவரை தர, அந்த ஓவரில் பவர் பிளே முடிந்து முகமது சிராஜ் குஷால் மெண்டிஸ் விக்கெட்டை கிளீன் போல்டில் வெளியேற்றினார்.

இங்கிருந்து அடுத்த மூன்று விக்கெட்டுகள் மடமடவென்று ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் வீழ்ந்து, இலங்கை அணி மொத்தமாக 50 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து விட்டது. இலங்கைத் தரப்பில் குசால் மெண்டிஸ் 17, ஹேமந்த் 13 ரன்கள் எடுத்தார்கள். மற்ற யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இலங்கை அணிக்கு இது இரண்டாவது மோசமான ஸ்கோராக ஒருநாள் கிரிக்கெட்டில் பதிவானது.

இந்தப் போட்டியில் முகமது சிராஜ் ஏழு ஓவர்கள் பந்து வீசி, ஒரு மெய்டன் செய்து, 21 ரன்கள் தந்து ஆறு விக்கெட் கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா 2.2 ஓவர்கள் பந்து வீசி மூன்று ரன்கள் விட்டுத் தந்து மூன்று விக்கெட் வீழ்த்தினார். பும்ரா ஐந்து ஓவர்களுக்கு ஒரு மெய்டன் 23 ரன்கள் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ரன்களுக்கு செய்த ஆல் அவுட் என்பது, தற்பொழுது இலங்கை அணியை 50 ரன்களுக்கு சுருட்டியது பதிவாகி இருக்கிறது. இந்த வகையில் கேப்டனாக ரோஹித் சர்மா சாதனையில் பதிவாகி இருக்கிறது. சுரேஷ் ரெய்னா தலைமையில் 58 ரன்களுக்கு பங்களாதேஷ் அணியை ஆல் அவுட் ஒருநாள் கிரிக்கெட்டில் செய்திருந்தது சாதனையாக இருந்தது. மூன்றாவது இடத்தில் ஜிம்பாப்வே அணியை 65 ரன்களுக்கு கங்குலி தலைமையிலான இந்திய அணி சுருட்டியது இருக்கிறது!