நான் சொன்ன இதை கம்மின்ஸ் ஆரம்பத்துல ஒத்துக்கல.. ஆனா கடைசியா ஏத்துக்கிட்டாரு – நிதிஷ் குமார் ரெட்டி பேட்டி

0
174
Nitish

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணிக்காக களம் இறங்கிய இந்திய உள்நாட்டு வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி பேட்டிங் மற்றும் பந்துவீச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறார். மேலும் நேற்றைய போட்டியில் அவர் எவ்வாறு பேட்டிங் மற்றும் பந்துவீச்சை திட்டமிட்டார்? என்று கூறியிருக்கிறார்.

ஹைதராபாத் அணி நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பொழுது முதல் நான்கு விக்கெட்டை 64 ரன்களுக்கு இழந்துவிட்டது. இந்த நிலையில் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் நிதீஷ் குமார் ரெட்டி அனுப்பி வைக்கப்பட்டார். ஆரம்பத்தில் பஞ்சாப் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பொறுமை காட்டிய அவர், சுழல் பந்துவீச்சாளர் பிரார் வந்ததும் அதிரடியில் நொறுக்கி தள்ளினார்.

- Advertisement -

நேற்று பேட்டிங்கில் 37 பந்தில் 64 ரன்கள் குவித்தார். இதேபோல் பந்துவீச்சில் சிறப்பான ஸ்லோ பவுன்சர் ஒன்றை வீசி இதே ஜிதேஷ் சர்மாவின் முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார். பேட்டிங்கில் திருப்ப முனையை ஏற்படுத்திக் கொடுத்தவர், பந்து வீச்சிலும் ஹைதராபாத் அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகனாகவும் அவரே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது நேற்றைய போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தனது திட்டம் குறித்து பேசி இருக்கும் அவர் கூறும் பொழுது “உண்மையில் எனக்கு பஞ்சாப் வேகப்பந்துவீச்சாளர்களை அடித்து விளையாடுவது கடினமாக இருந்தது. அர்ஸ்தீப் சிங் அவுட் ஸ்விங்கர்களை மிக நன்றாக வீசிக் கொண்டிருந்தார். எனவே நான் பிரார் பந்துவீச்சுக்காக காத்திருந்தேன். சுழல் பந்துவீச்சாளரான அவர் வந்ததும் நான் தாக்கி விளையாட ஆரம்பித்தேன்.

பிரார் பந்துவீச்சுக்கு வந்ததுமே நான் அடித்து விளையாட ஆரம்பித்து விட்டேன். ஏனென்றால் அவரைத் தாக்கி விளையாட வில்லை என்றால் நாங்கள் நல்ல டோட்டலை எடுக்கவே முடியாது என்று தெரியும். மேலும் அந்த நிலையில் என்னுடன் விளையாட அப்துல் சமாத் வந்திருந்தார். அவர் அனைத்து பந்துவீச்சாளர்களையும் தாக்கி விளையாட ஆரம்பித்தது, நான் பேட்டிங் செய்வதற்கு வசதியாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரு வாரமா யோசிச்சேன்.. ப்ளீஸ் பிசிசிஐ மயங்க் யாதவை பாதுகாக்க 2 வருஷம் இதை செய்யுங்க – இயான் பிஷப் வேண்டுகோள்

நான் எனது பந்துவீச்சிலும் மிகவும் நம்பிக்கை உடன் இருந்தேன். எனது கேப்டன் கம்மின்ஸ் இடம் நான் ஸ்லோ பவுன்சர்களை வீச இருப்பதாக கூறினேன். அதற்கு பதிலாக அவர் ஹார்ட் லென்த்தை வீசுவது நல்லது என்று கூறினார். பிறகு நான் எனது திட்டத்தில் உறுதியாக இருந்ததால், உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் அப்படியே வீசுங்கள் என்று என்னை விட்டுவிட்டார். இது எனக்கு நன்றாக வேலை செய்தது” என்று கூறியிருக்கிறார்.