சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தோற்கடித்தது. வெற்றிக்கு பின்னர் பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஒருவருக்கு மட்டும் பந்து வீச விரும்பமாட்டேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் .
ஹைதராபாத்தில் உள்ள உப்பல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய சென்னை அணியை அழைத்தது. டெல்லி அணியுடன் தோல்விக்கு பிறகு இப்போட்டியில் கட்டாயம் வெற்றி வெற்று ஆக வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ஆடுகளம் கை கொடுக்கவில்லை.
மெதுவான இந்த ஆடுகளத்தை ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். தொடக்கம் முதலே மெதுவான பந்துகளை வீசியும் பவுண்டரி தூரம் அதிகமாக இருக்கும் பகுதியிலும் சென்னை பேட்ஸ்மேன்களை விளையாட வைத்து, ரன் வேகத்தை வெகுவாக குறைத்தனர். இதனால் சென்னை அணியின் ஆல் ரவுண்டர் சிவம் தூபேவை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முடியவில்லை.
சிவம் டுபே 24 பந்துகளில் இரண்டு பவுன்டரி, நான்கு சிக்ஸர்கள் என 45 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார். மற்றொரு மூத்த அனுபவ வீரரான ரகானே 30 பந்துகளில் 35 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதியில் ஜடேஜா 23 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். இறுதியில் சென்னை அணி 120 பந்துகளில் 165 ரன்கள் குவித்தது. பின்னர் 166 ரன்கள் குவித்தால் வெற்றி என்று இலக்குடன் ஹைதராபாத் அணி களம் இறங்கியது.
சன்ரைசர்ஸ் அணியைப் போலவே சென்னை அணியிலும் பந்துவீச்சாளர்கள் கடினமாக வீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், அந்த அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அந்தக் கனவை முற்றிலும் சிதைத்தார். தொடக்க முதலே அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 37 ரன்களை விளாசினார். நேற்று முதல் போட்டியில் களமிறங்கிய முகே ஷ் சௌத்ரியின் ஒரே ஓவரில் 26 ரன்களை விலாசினார். பின்னர் களமிறங்கிய மார்க்ரம் 50 ரன்கள் குவிக்க, ஹைதராபாத் அணி 18.1 ஓவரில் 166ரன்கள் குவித்து வெற்றி இலக்கினை அடைந்தது.
ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டி
வெற்றிக்கு பின்னர் பேட்கம்மின்ஸ் கூறும் பொழுது “வெவ்வேறு மண்ணில் விளையாடும் போது ஆடுகளத்தின் வேகம் குறைந்தது. அதாவது சென்னை அணி பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் வேகம் குறைவாகவும், நாங்கள் பேட்டிங் செய்யும்போது சிறிது சாதகமாகவும் காணப்பட்டது. ஆனால் இது ஒரு அருமையான ஆட்டம். எங்களிடம் நிறையவே பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். சிவம் டுபே எப்போதுமே சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக அடிக்கக்கூடியவர். எனவே அவருக்கு எதிராக வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு ஆப் கட்டர்களை முயற்சி செய்தோம்.
இதையும் படிங்க:தோனி பேட்டிங் வராம தடுக்க ஜடேஜாவுக்கு அப்பீல் செய்யலையா? கோலிக்கு செய்விங்களா.. கம்மின்ஸ்க்கு கைஃப் கேள்வி
எங்கள் அணியின் அபிஷேக் ஷர்மா அற்புதமாக பேட்டிங் செய்தார். அவருக்கு பந்து வீசுவது கடினம். ஒரு பந்துவீச்சாளராக நான் அதை எப்போதுமே விரும்ப மாட்டேன். மகேந்திர சிங் தோனி களம் இறங்கிய போது அவருக்காக ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பிய போது என்னை வியப்பில் ஆழ்த்தியது. சொந்த மைதானத்தில் விளையாடுவதை நாங்கள் எப்போதும் விரும்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.