எழுதி வைங்கடா.. சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் கிடையாது; ஐபிஎல் பைனல் இந்த இரண்டு அணிக்கும் தான் நடக்கும்! – இப்போதே கணித்த ஸ்ரீசாந்த்!

0
12578

இந்த வருட ஐபிஎல் பைனல் எந்த இரண்டு அணிகளுக்கும் நடைபெறும் என்பதை தனது கணிப்பில் கூறியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த்.

இத்தனை வருட ஐபிஎல் வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்த வருட ஐபிஎல் சீசன் கடும் நெருக்கடியாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கு முன்பெல்லாம் ஓரிரு வாரங்களுக்கு முன்பே குறைந்தபட்சம் என்ற மூன்று அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிடும். நான்காவது இடத்தை எந்த அணி பிடிக்கும் என்பதற்கு தான் போட்டிகள் நிலவும்.

- Advertisement -

ஆனால் இந்த வருட ஐபிஎல் சீசனில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை குஜராத் அணி பிடித்துவிட்டது. அடுத்த மூன்று இடங்களுக்கு பல அணிகள் போட்டி போடுகின்றன. அனைத்து அணிகளுக்கும் மீதம் ஒரு லீக் போட்டி மட்டுமே இருக்கின்றது. வ

வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டு லீக் போட்டிகளின் முடிவில் அடுத்த மூன்று இடங்கள் எந்தெந்த அணிக்கு என்பது ஏறக்குறைய தெரிந்துவிடும்.

இப்படியொரு நெருக்கடியான சூழல் நிலவுகையில், “இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் தொலைக்காட்சியில் வர்ணனை செய்துகொண்டிருக்கும்பொழுது எந்த இரண்டு அணிகள் இந்த வருட ஐபிஎல் பைனலில் மோதுவார்கள்? என்று தனது கணிப்பை கூறினார். அதில் குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, ஆர்சிபி ஆகிய அணிகள் இல்லாதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீசாந்த் கணித்ததாவது:

- Advertisement -

“இந்த வருட ஐபிஎல் பைனலில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் மோதும் என்று கருதுகிறேன். நடுவில் தடுமாறி வந்த ஆர்சிபி அணி கடைசி இரண்டு லீக் போட்டிகளில் விளையாடிய விதம் அவர்களது பலத்தை காட்டி வருகிறது. அதேபோல் லக்னோ அணியில் கேஎல் ராகுல் இல்லாத சூழலில் க்ருனால் பாண்டியா மிகச்சிறப்பாக நிரப்பி வருகிறார். அவரது ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் என்னை ஈர்த்துள்ளது. இவர்கள் இருவரும் இறுதி போட்டியில் மோதுவார்கள் என்று கணிக்கிறேன்.” என்றார்.