ஓப்பனா சொல்றேன் எனக்கு இந்த பிட்ச் மேல பயம்; இருந்தும் நாங்க வின் பண்ணோம், இதுக்கு கிரெடிட் ஒருத்தருக்கு கொடுத்தே ஆகணும் – நிதிஷ் ராணா பேட்டி!

0
606

சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் என்னை அச்சுறுத்தியது என்று போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்துள்ளார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் பல வருடங்களுக்கு பிறகு வீழ்த்தி கொல்கத்தா அணிக்கு பெருமை சேர்த்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நித்திஷ் ராணா, இந்த மகத்தான வெற்றி குறித்து பேட்டி அளிக்கையில் பேசியதாவது:

- Advertisement -

“டாஸ் போடும்போது கூறினேன். இன்றைய தினம் நாங்கள் பேட்டிங் பௌலிங் மற்றும் பேர்ல்டிங் மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சிஎஸ்கே போன்ற அணியை வீழ்த்த முடியும் என்றேன். அதற்கேற்றார் போல இன்று மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள்.

சேப்பாக்கம் பிட்ச் எனக்கு பதட்டத்தை கொடுத்தது. பிட்ச்சில் ரோலர் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. விரிசல் விழுந்துவிடுமோ என நினைத்தேன். என்னால் சரியாக விளையாட முடியாதோ என்று சந்தேகத்துடன் இருந்தேன். பயிற்சியாளர் சந்திரகாந்த் எனக்கு சில அறிவுரைகளை கூறி, என்னுடைய பேட்டிங் ஸ்டைலுக்கு இந்த பிட்ச் சரியாக இருக்கும் என்றார். அதை உணர்ந்து நிதானமாக விளையாடினேன்.

கடைசி ஓவர் வரை விரிசல் வருமோ எனும் பதட்டம் இருந்தது. அதிர்ஷ்டவசமாக நடக்கவில்லை. ஒட்டுமொத்தமாக நாங்கள் செயல்பட்ட விதம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்த சீசன் எங்களுக்கு சொந்தம் மைதானம் சாதகமாக அமையவில்லை. இது போன்று வெளிமைதானங்களில் பெற்ற வெற்றி தான் பக்கபலமாக இருக்கிறது.” என்றார்.

- Advertisement -