அறுந்து விழுந்த ஸ்பைடர் கேமரா கம்பி.. நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி.. அதிர்ஷ்டவசமாக வீரர்கள் தப்பினார்கள்

0
132
IPL

இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும்மோதி வருகின்றன. நல்ல அணி அமைந்திருந்தும் கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லாதது, அந்த அணி நிர்வாகத்துக்கு ஏமாற்றமாக அமைந்திருந்தது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் தங்கள் அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும் என்று அவர் கணித்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு சாதகமாக இல்லை. ஆடுகளத்தில் இரட்டை வேகமும், மாறுபட்ட பவுசரும் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய் ஸ்வால் மற்றும் இங்கிலாந்து வெள்ளை பந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் இருவரும் வந்தார்கள். லக்னோ அணியில் இருந்து முதல் ஓவரை மோசின் கான் வீசினார். முதல் பந்தை தடுத்து விளையாடிய ஜெய்ஸ்வால் இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார்.

இந்த நிலையில் திடீரென போட்டி நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது. சற்று நேரம் மைதானத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த நேரத்தில் தொலைக்காட்சியில் மைதானத்தைச் சுற்றி ஏதோ வயர் போல ஒன்றை கையில் சுற்றி எடுத்துக் கொண்டு சென்றார்கள். கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கும் ஆரம்பத்தில் புரியவில்லை.

கடைசியில் அது மைதானத்திற்கு மேலே நகரும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும் ஸ்பைடர் கேமராவை தாங்கி பிடித்து இருக்கும் கம்பிகளில் ஒன்று என தெரிந்தது. கேமராவை தாங்கிப் பிடித்திருக்கும் அந்த கம்பி ஒன்று அறுந்து விழுந்து இருக்கிறது. அதை சுற்றி எடுத்து அப்புறப்படுத்துவதற்கு தாமதமானதால் போட்டி நிறுத்தப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : சாம்சன் சங்கக்கராவின் மாஸ்டர் மைண்ட்.. இம்பேக்ட் பிளேயரை உள்ளே தூக்க தெறி பிளான்

அதிர்ஷ்டவசமாக மைதானத்தில் இருந்த வீரர்கள் யாருக்கும் இதனால் காயம் ஏதும் ஏற்படவில்லை. ஒரு பக்கத்தின் கம்பி மட்டும் அறுந்து விழுந்ததால் கேமரா எந்த வீரர்களின் மேலும் விழவில்லை. இதனால் பெரிய அபாயம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. ஸ்பைடர் கேமரா என்பது வயர் இல்லாமல் செயல்படக்கூடியது. அதே சமயத்தில் மின்விளக்கு கோபுரங்களில் இருந்து கம்பிகள் மூலமாக, மைதானத்திற்கு மேலிருந்து எல்லா பக்கத்திற்கும் சென்று படம் எடுக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.