இந்தியாவை காலி செய்ய களமிறங்கும் தென்னாபிரிக்கா பிளேயிங் லெவன் அறிவிப்பு!

0
261

இந்திய அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் களமிறங்கும் தென்னாப்பிரிக்காவின் உத்தேச 11 வீரர்கள் பட்டியலை காண்போம்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது. இதற்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று இந்தியா வந்திருக்கிறது.

- Advertisement -

முதல் டி20 போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. தென்னாப்பிரிக்கா வீரர்கள் 25ஆம் தேதி இந்த மைதானத்திற்கு வந்துவிட்டனர். அப்போதிலிருந்து தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டி20 உலக கோப்பை தொடருக்கு பயிற்சி மற்றும் முன்னோட்டமாக இந்த தொடர் அமைந்திருப்பதால் இந்திய அணி சற்று கவனத்துடன் விளையாடி வருகிறது. மேலும் அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் வாரிசையில் சில மாற்றங்களை மேற்கொண்டு அதிலும் பரிசோதனைகளை செய்து பார்க்கிறது.

பலமிக்க இந்திய அணியை வீழ்த்தினால் மிகப்பெரிய உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நம்பிக்கை கிடைக்கும் என்ற முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணியும் களமிறங்க உள்ளது. முதல் டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்காக களம் இறங்கும் தென் ஆப்பிரிக்க அணியின் 11 வீரர்கள் கொண்ட பட்டியலின் விபரத்தை இங்கு காண்போம்.

துவக்க வீரர்களாக டி காக் மற்றும் ஹென்றிக்ஸ் இருவரும் இருக்கின்றனர். அயர்லாந்து டி20 தொடரில் ஹென்றிக்ஸ் மிகச் சிறப்பாக விளையாடினார். சராசரி 50க்கும் அதிகமாக வைத்திருக்கிறார். இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் ஏய்டன் மார்க்ரம் மற்றும் டெம்பா பவுமா இருவரும் இருக்கின்றனர். மார்க்ரம் அயர்லாந்து தொடரில் கடைசியாக 83 ரன்களை விலாசினார். நல்ல பார்மிற்கும் வந்திருக்கிறார். பவுமா அயர்லாந்து தொடரில் இடம் பெறவில்லை.

- Advertisement -

டேவிட் மில்லர் மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளிக்கிறார். அயர்லாந்து தொடரில் ஒரு போட்டியில் விளையாடி 32 ரன்கள் அடித்திருந்தார். இந்திய மண்ணில் இவர் வழக்கமாக நன்றாக விளையாடுவதை நாம் அனைவரும் அறிவோம். மேலும் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வெயின் பர்னெல் அயர்லாந்து தொடரில் அபாரமாக பந்துவீசி 2 போட்டிகளில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பேட்டிங்கிலும் நல்ல பங்களிப்பை இவர் கொடுப்பார் என்பதால் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருப்பார்.

சுழல் பந்துவீச்சில் கேசவ மகராஜ் மற்றும் சம்சி இருவரும் விளையாடுவர். இருவரும் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இரண்டு விக்கெட்டுகள் மற்றும் மூன்று விக்கெட்டுகள் முறையை வீழ்த்தி இருந்தனர். இவர்கள் இருவருக்கும் இந்திய மண்ணில் நன்றாக எடுபடும் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் சற்று கவனத்துடன் விளையாடுவது முக்கியம்.

தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சில் ஆன்ட்ரெ நார்கியா, ககிசோ ரபாடா மற்றும் லுங்கி இங்கிடி ஆகிய மூவரும் நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கின்றனர். அயர்லாந்து தொடரின் போது 1 விக்கெட், இரண்டு விக்கெட் மற்றும் இரண்டு விக்கெட்டுகள் முறையே மூவரும் வீழ்த்தி இருந்தனர். மூவருக்கும் இந்திய மைதானம் பரிச்சயமானது என்பதால் நிச்சயம் ஆதிக்கம் செலுத்த முனைப்பாக இருப்பர்.

இந்திய அணிக்கு எதிராக களமிறங்கும் தென்னாப்பிரிக்காவின் உத்தேச 11 வீரர்கள்:

குவின்டன் டி காக், ரேஸ் ஹென்ரிக்ஸ், ஏய்டன் மார்க்ரம், டெம்பா பவுமா, டேவிட் மில்லர், வெயின் பர்னெல், கேசவ மகராஜ், ஷம்ஷி, ஆன்ட்ரே நார்கியா, காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.