உலக கிரிக்கெட்

பாகிஸ்தான் 2வது டெஸ்ட்.. தென் ஆப்பிரிக்கா பிளேயிங் XI அறிவிப்பு.. 18 வயது ராஜஸ்தான் ராயல்ஸ் வீரருக்கு இடம்

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி அடுத்ததாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாளை விளையாட உள்ள நிலையில் அதற்கான 11 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதில் முக்கிய மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் நிலையில் கடந்த சீசனில் மும்பை அணிக்காக விளையாடிய 18 வயது வீரர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக உள்ளார்.

தென்னாபிரிக்க அணியில் 18 வயது வீரர்

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பாக விளையாடி வருவதை தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் த்ரில்லர் வெற்றி பெற்றதன் மூலமாக இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெற்று இருக்கிறது. 148 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ரபாடா மற்றும் ஜான்சன் கூட்டணி 51 ரன்கள் குவித்ததன் மூலமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

மேலும் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி டேன் பீட்டர்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக 18 வயது இளம் வீரர் க்வானா மகாபா தனது முதல் போட்டியில் விளையாட இருக்கிறார். இவர் கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கு சில போட்டிகள் விளையாடி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணிக்கு விளையாட ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆல் ரவுண்டர் வியான் முல்டர் டோனி சார்ஷிக்கு பதிலாக களமிறங்க உள்ளார்.

- Advertisement -

அறிவிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா பிளேயிங் லெவன்

மேலும் சுழல் பிரிவில் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட கார்பின் போஸ்க்கு பதிலாக கேசவ் மகாராஜ் இரண்டாவது போட்டியில் விளையாட இருக்கிறார். மேலும் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய மார்க்ரம் மற்றும் கேப்டன் பவுமா ஆகியோர் பேட்டிங்கில் தொடர்கிறார்கள். மேலும் பந்துவீச்சில் ரபாடா மற்றும் ஜான்சன் ஆகியோர் சிறந்து விளங்குகின்றனர்.

இதையும் படிங்க:நாங்க ஈசியா பைனல்க்கு வரல.. இந்திய அணி மாதிரி அந்த ஆசை இருக்கு.. வாகனின் கருத்துக்கு பவுமா பதிலடி

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டாவது போட்டியில் களமிறங்க உள்ள தென்னாப்பிரிக்க அணி :

ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்காம், கைல் வெர்ரேய்ன் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, குவேனா மபாகா.

- Advertisement -
Published by

Recent Posts