IND vs SA.. குழு அமைங்க.. தோனிக்கு பதவி குடுங்க.. பிசிசிஐக்கு சுனில் கவாஸ்கர் அட்வைஸ்.. காரணம் என்ன.?

0
3103

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் மிக மோசமாக தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பல இந்திய முன்னாள் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

விராட் கோலி கேப்டனாக இருந்தபோது இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக 5 டெஸ்ட் மையங்கள் அமைத்து அதன் மூலமே உள்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களுக்கான ஆடுகளங்களை இறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை ஐந்து நாள் நடக்கும் போட்டி என்பதால் ஒவ்வொரு நாடும் ஆடுகளம் அதன் தன்மைக்கு ஏற்ப மாறும்.

- Advertisement -

டெஸ்ட் போட்டிக்கு ஆடுகளங்களை தயார் செய்வதில் சிறிது கால இடைவெளி இந்திய அணிக்கு தகுந்தவாறு ஆடுகளங்களை குறிப்பிடத்தக்க நேரங்களில் வழக்க முடிவதில்லை. இதனால் சொந்த மண்ணில் விளையாடும் இந்திய அணிக்கு அது சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. இதனை வலியுறுத்தியே இந்தியாவில் டெஸ்ட் மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று விராட் கோலி கூறி இருக்கிறார்.

மேலும் இந்திய அணி இந்தியா தவிர்த்து வெளிநாட்டில் புற்கள் நிறைந்த வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாடும் பொழுது தடுமாறுகிறார்கள். இதனை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுத்தால்தான் இந்திய அணி இது போன்ற பிரச்சனைகளில் கவலைப்பட வேண்டியதில்லை. இதனை தற்போது இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் வலியுறுத்தி இருக்கிறார். இந்தியாவில் டெஸ்ட் மையங்கள் அமைத்து அதில் சச்சின் டெண்டுல்கர் எம்எஸ் தோனி லட்சுமணன் மற்றும் அகர்கர் ஆகியோர் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது
“இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் தொடருக்கு ஆடுகளம் பயன்படுத்துவது குறித்து முடிவு செய்ய தனியாக ஒரு குழு இருக்க வேண்டும். அதில் பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளரை தவிர சச்சின், கம்பீர், தோனி, லட்சுமண் மற்றும் அகர்கர் ஆகியோர் அக்குழுவில் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதனை 2019 ஆம் ஆண்டு விராட் கோலியும் வலியுறுத்தினார். இது குறித்த அவர் கூறுகையில்
“இந்தியாவில் 5 டெஸ்ட் மையங்கள் இருக்க வேண்டும் என்பது என் கருத்து. மாநில சங்கங்கள் மற்றும் அதன் விதிமுறைகள் என அனைத்திற்கும் நன் உடன்படுகிறேன். டி20 மற்றும் ஒரு நாள் தொடருக்கு வேண்டுமானால் அனைத்து அடையாளங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு குறிப்பிடத்தக்க ஆடுகளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை இந்தியாவிற்கு வந்த டெஸ்ட் விளையாடும் மற்ற அணிகளும் தெரிந்து கொள்ள வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் சுவாரசியம் இருந்தால்தான் மக்கள் அதனை காண ஆடுகளத்திற்கு வருவார்கள்” என்று கூறினார்.