இந்தியா சிறந்த அணிதான்.. ஆனா வங்கதேச டி20ல் பிசிசிஐ செஞ்ச இந்த தப்ப அவங்க ஒத்துக்கிட்டுதான் ஆகணும் – தென் ஆப்பிரிக்க வீரர் ஷம்சி பேட்டி

0
3961

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20கிரிக்கெட் போட்டி நடைபெற்ற ஆடுகளத்தில் இந்திய பேட்டிங் வீரர்களின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது.

இது குறித்து தென்னாப்பிரிக்க அணியின் சுழற் பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி சில கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி சிறப்பான வெற்றி

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரில் முதல் இரண்டு போட்டி நடைபெற்ற ஆடுகளங்கள் பேட்டிங்க்கு நன்றாக சாதகமாக இருந்த நிலையில் இந்திய அணி இதனை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. மேலும் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்ற ஹைதராபாத் ஆடுகளமும் பேட்ஸ்மேன்களின் சொர்க்க பூமியாக விளங்கியது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட இந்தியா பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி இரண்டாவது டி20 அணியின் அதிகபட்சமாக 297 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. மேலும் இந்த டி20 தொடரை இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றி உள்ளது.

இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி சுழற் பந்து வீச்சாளர் ஆன ஷம்சி போட்டி நடைபெற்ற ஆடுகளங்கள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது இந்திய பேட்டிங் குறித்தும் அவர்களது திறமை குறித்தும் எந்த விதமான சந்தேகமும் இல்லை என்றும், ஆனால் ஆடுகளம் என்பது பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் திறமையில் சந்தேகம் இல்லை

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்தியா பேட்ஸ்மேன் தரம் குறித்தும், திறமை குறித்தும் எந்த விதமான சந்தேகமோ சர்ச்சையோ இல்லை. ஆனால் இரண்டு அணிகளும் பேட்டிங் செய்தவுடன் மட்டுமே தான் ஆடுகளம் குறித்து தீர்மானிக்க முடியும். போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு இடையே ஒரு சமநிலை இருக்க வேண்டும். பெரிய எல்லை அளவு கொண்ட ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களுக்கும் உதவி வேண்டும்.

இதையும் படிங்க:இலங்கை டி20 பின்.. எல்லாம் முடிஞ்சுன்னு நினைச்சேன் .. ஆனா அந்த 3 பேர் அனுப்பின மெசேஜ் தான் மாத்துச்சு – சஞ்சு சாம்சன் பேட்டி

நிச்சயமாக இந்தியா தரமான வீரர்களைக் கொண்ட ஒரு அணி தான். அதில் சந்தேகம் இல்லை ஆனால் ஆடுகளத்தில் பந்து வீச்சாளர்களுக்கும் ஒரு சிறிய உதவி என்பது கண்டிப்பாக தேவை” என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். இருப்பினும் இந்தியா தனது சிறப்பான பந்துவீச்சால்தான் வங்கதேச அணியை குறைந்த ரன்களில் ஆட்டம் இழக்க செய்திருக்கிறது என்பதையும் கவனிக்க கூடிய விஷயமாக இருக்கிறது. எனவே சம்ஷியின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் தங்களது பதிலை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -