இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணிகளின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி சதம் அடித்து இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த சூழ்நிலையில் இந்த தொடருக்காக தயாரான விதம் குறித்து சஞ்சு சாம்சன் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
சஞ்சு சாம்சன் அபார சதம்
டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்ற வந்த நிலையில் முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் மூன்றாவது போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு மிகச் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் 47 பந்துகளில் 111 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
இதில் 11 பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்கள் அடங்கும். அவரது அதிரடி ஆட்டம் இந்திய அணி 297 குவிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதற்குப் பிறகு களம் இறங்கிய வங்கதேச அணி 164 ரன்கள் குவித்த நிலையில் 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் சாம்சன் இந்த தொடருக்கு தயாரான விதம் குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
தொடர்ந்து எனக்கு ஆதரவு கிடைத்தது
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “அதிர்ஷ்டவசமாக வங்கதேச தொடர் தொடங்குவதற்கு மூன்று வாரத்திற்கு முன்பு தலைமை குழுவில் இருந்து எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. மூன்று வாரங்களுக்கு முன்பாக கௌதம் கம்பீர், சூரியகுமார் யாதவ் மற்றும் அபிஷேக் நாயர் ஆகியோர் நான் இந்தத் தொடரில் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்குவேன் என்று கூறினார்கள். இது எனக்கு தயாராவதற்கு போதிய அவகாசம் கொடுத்தது. நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அகாடமிக்கு சென்று நிறைய புதிய பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடினேன்.
அங்கு விளையாடியது எனக்கு இந்த தொடருக்கு நான் தயாராவதற்கு உதவியது. கடந்த தொடர்களை விட இதில் பத்து சதவீதம் கூடுதலாக நான் தயாரானேன். இலங்கை தொடர் முடிந்த இரண்டு வாரங்கள் கழித்து அடுத்த தொடரில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் இந்திய நிர்வாகம் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தது. எது நடந்தாலும் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறினார்கள். ஒவ்வொரு எதிரணியும் பந்துவீச்சு பிரிவில் நாங்கள் ஆதிக்கம் செலுத்த பேட்டிங் குழுவாக கடமைப்பட்டிருக்கிறோம்.
இதையும் படிங்க:இந்தியா 297 ரன்கள் எடுத்தும்.. கம்பீர் மனசுல அந்த குறை கண்டிப்பா இருக்கும் – ஆகாஷ் சோப்ரா கருத்து
இந்திய அணிக்கு விளையாடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தோல்விகளிலிருந்து மீண்டும் திரும்பி விளையாடும் போது நான் எனக்காக ரன்கள் குவிக்க விரும்புகிறேன் ” என்று சொல்லலாம் என்று கூறியிருக்கிறார்.