இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீரரும் சிறந்த வேகப்பந்துவீச்சாளரமாக ஜஸ்பிரித் பும்ரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்பார் என்றும் கருத்துக்கள் நிலவுகிறது.
இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளரான தப்ரைஸ் ஷம்சி தனக்கும் பும்ராவுக்கும் இடையேயான ஒற்றுமை குறித்து கூறியிருக்கிறார்.
டி20யில் முக்கிய பங்கு வகிக்கும் இருவர்
இந்திய அணிக்கு மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் மிக முக்கிய வேகப்பந்துவீச்சாளராக பும்ரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக டி20 போட்டிகளில் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பந்து இவரது கைகளில் கொடுக்கப்படும் போது முடிந்தளவு சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வருகிறார். அதற்கு உதாரணம் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய போது இறுதியில் இவர் வீசிய இரண்டு ஓவர்கள் உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக திகழும் தப்ரைஸ் ஷம்சி தனது அணிக்காக சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் டி20 போட்டிகளில் இவரது பங்கு தென்னாப்பிரிக்க அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக அமைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் யாருமே எதிர்பாராத விதமாக இவரும் பும்ராவும் ஒரே எண்ணிக்கையிலான டி20 போட்டிகளும், அதில் வீசப்பட்ட பந்துகளும் எடுத்த விக்கெட்டுகளும் அமைந்திருக்கின்றன.
ஒரே எண்ணிக்கையிலான போட்டி, பந்துகள், விக்கெட்
இதுகுறித்து ஷம்சி கூறும் போது “இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் முற்றிலும் உண்மை. நானும் பும்ராவும் ஒரே அளவிலான டி20 போட்டிகளில் விளையாடியுள்ளோம். அதில் ஒரே எண்ணிக்கையில் பந்துகளை வீசி இருக்கிறோம், மேலும் அதே அளவு விக்கெட்டுகளையும் எடுத்து இருக்கிறோம். இது பைத்தியக்காரத்தனமான தற்செயலாக அமைந்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க:எங்க டீமுக்கு சப்போர்ட் பண்ணல.. ஆனா இந்திய அணிக்கு இவர் ஆடலனா முடிவு வேற மாதிரி இருக்கும் – கிளார்க் கருத்து
சொன்னது போலவே இவரும் பும்ராவும் இதுவரை 70 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார்கள்.1509 பந்துகளை வீசி இருப்பதுடன் 89 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருவருக்கும் முற்றிலும் அரிதான நிகழ்வாக நடந்திருக்கிறது. இதை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இந்திய அணி டி20 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உலக கோப்பையை வென்றதுடன் தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற நான்கு டி20 போட்டிகளில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.






