இந்திய கிரிக்கெட் அணி வருகிற 22ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இயலாத நிலையில் அணியின் கேப்டனாக பும்ரா அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை பார்டர் கவாஸ்கர் டிராபி கோப்பை கைப்பற்றி அசத்தியுள்ளது. இருப்பினும் இந்திய அணி கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணிலேயே தோல்வியை சந்தித்திருப்பதால் ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணியால் வெற்றி பெற முடியுமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. அதிலும் குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.
அணியின் மூத்த வீரர்கள் ஆன விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் ஃபார்ம் இன்றி தவிப்பது இந்திய அணிக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலியா அணி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறாவிட்டாலும் தொடரை ஆஸ்திரேலியாதான் கைப்பற்றும் எனவும் இந்திய அணி விராட் கோலியை மட்டுமே அதிகம் சார்ந்து இருப்பதாக சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய அணி வெற்றி பெற இவர்தான் விளையாட வேண்டும்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்று சொல்லப் போவதில்லை. ஆனால் 3-2 என்ற கணக்கில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். எல்லா டெஸ்ட் போட்டிகளிலும் முடிவு கிடைக்கும். இரண்டு அணிகளும் வெற்றி பெறுவதும் தோல்வியடைவதையும் பார்க்கலாம். அதனால் போட்டி டிரா ஆகும் என்று நான் நம்பவில்லை. மேலும் வானிலையும், தட்பவெப்பநிலையும் அதற்கு தகுந்தவாறு இருக்க வேண்டும்.
இதையும் படிங்க:ஆஸி வீரர்கள் என்ன ஒழுங்கா.. அவங்க 2 பேர் எப்படி தெரியுமா? கம்பீர் செஞ்சதுதான் சரி – கங்குலி ஆதரவு
இந்திய அணி தொடரை வெல்ல வேண்டும் என்றால் விராட் கோலிதான் அதிக ரன்கள் குவித்தவர் ஆக இருக்க வேண்டும். ரிஷப் பண்ட் அதற்கு பின் தங்கியிருப்பார். அதுவே ஆஸ்திரேலியா அணிக்கு பார்க்கும்போது ஸ்மித் முக்கிய வீரராக இருப்பார் என்று நினைக்கிறேன். பும்ரா இந்திய அணியின் முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தியவர், எனவே அவரைச் சுற்றி அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன்” என கூறி இருக்கிறார்.