டி20 உலக கோப்பை பைனல் தோல்வி.. அதுக்கு மேல ஆட மனசே இல்ல.. எல்லாம் தீர்ந்தது – ஹென்றி கிளாசன் பேட்டி

0
1705
Klassen

தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் ஹென்றி கிளாசன் இந்த வருடம் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி தோல்விக்கு பிறகு தன்னுடைய மனநிலை எப்படி மாறியது என்பது குறித்து பேசி இருக்கிறார்.

இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடிய 27 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் வெளியேறும் போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு 30 பந்தில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அந்த இடத்திலிருந்து தென் ஆப்பிரிக்க அணி உலகக் கோப்பையை இழந்தது அவர் மனதை வெகுவாக பாதித்திருக்கிறது.

- Advertisement -

மூன்று பைனல் தோல்வி

ஹென்றி கிளாசன் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்காக என மொத்தம் மூன்று இறுதிப் போட்டிகளில் ஒரே வருடத்தில் விளையாடி தோல்வி அடைந்த வீரராக இருக்கிறார்.

மேலும் டி20 உலக கோப்பை தொடரை தோற்ற ஐந்து நாட்கள் இடைவெளியில் அமெரிக்காவின் டி20 லீக்கில் சீட்டில் ஆர்கஸ் அணிக்காக களம் இறங்கி விளையாடினார். அவருக்கு எல்லா தொடர்களும் சிறப்பாக ஆரம்பித்து இறுதிப்போட்டியில் சென்று தோல்வியில் முடிவது பெரியஅளவில் மனதை பாதித்திருக்கிறது. இறுதியாக உலகக் கோப்பை இறுதி போட்டியில் தோற்றது அவரை ஒட்டுமொத்தமாக நிலை குலைய வைத்திருக்கிறது.

- Advertisement -

என்னிடம் எல்லாம் தீர்ந்து விட்டது

இது குறித்து ஹென்றி கிளாசன் என்று கூறும்பொழுது ” டி20 உலகக் கோப்பை இறுதி போட்டிகள் தோல்வி அடைந்த அடுத்த ஐந்தாவது நாளில் நான் அமெரிக்க டி20 லீக்கில் விளையாடினேன். இதன் காரணமாக எனக்குள் இருந்த எல்லாமே எரிந்து போய் விட்டதாக நான் உணர்ந்தேன். நான் மூன்று அணிகளுக்காக டி20 தொடர்களில் மூன்று இறுதி போட்டிகளில் விளையாடி தோல்வி அடைந்திருக்கிறேன். இதன் காரணமாக நான் மனதளவில் சோர்வடைந்து விட்டேன்”

இதையும் படிங்க : 4வது தொடர் சதம்.. அபிமன்யு ஈஸ்வரன் அபார ஃபார்ம்.. ருதுராஜ் இடம் பறிபோகிறதா.. கம்பீர் என்ன செய்வார்?

“நான் ஆரம்பத்தில் கரீபியன் டி20 லீக்கில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக விளையாட வாக்குறுதி அளித்திருந்தேன். ஆனால் இப்படியான மனநிலையின் காரணமாக என்னால் இந்த ஆண்டு அவர்களுக்கு விளையாட முடியவில்லை. நான் என் மனநிலையை அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன் அவர்கள் புரிந்து கொண்டார்கள். மேலும் இந்த ஆண்டு அவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -