எங்கள் வெற்றிக்கு சவுத் ஆப்பிரிக்கா கேப்டன் தான் காரணம் – ஷிகர் தவன் வெற்றிக்குப் பிறகு பேச்சு!

0
521
Shikardhawan

தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியைத் தழுவி இருந்தது.

இன்று தொடரின் இரண்டாவது போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் கேஷவ் மஹராஜ் பேட்டிங் ஆடுகளம் என்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

- Advertisement -

தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களில் மூன்று மற்றும் நான்கு இடங்களில் களமிறங்கிய ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் மார்க்ரம் இருவரும் அரை சதங்கள் அடித்தார்கள். ஆறாவது பேட்ஸ்மேனாக வந்த டேவிட் மில்லர் முப்பத்தி நான்கு பந்துகளுக்கு 35 ரன்கள் அடித்தார். 50 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 278 ரன்கள் எடுத்தது. முகமது சிராஜ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றம் அளித்தார்கள். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி 161 ரன்கள் குவித்தது. இஷான் கிஷான் துரதிஷ்டவசமாக 93 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் நிலைத்து நின்று விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெற வைத்தார். இது அவரது இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி சதமாகும். அவருடன் கடைசி கட்டத்தில் இணைந்த சஞ்சு சாம்சன் 30 ரன்களில் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். தற்பொழுது தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. நாளை மறுநாள் தொடரை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி நடக்க இருக்கிறது.

இந்தப் போட்டி முடிந்ததும் வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் கூறும்பொழுது
” டாஸ் சரியாக வேலை செய்தது. கேஷவ் மஹராஜ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததற்கு நன்றி. இசான் மற்றும் ஸ்ரேயாஸ் பார்ட்னர்ஷிப் அமைத்த விதம் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது என்று தான் கூற வேண்டும். பந்து நன்றாக தாழ்வாக பேட்டுக்கு வந்தது. எனவே முதல் 10 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை வீழ்த்துவதுதான் எங்களது திட்டம். ஆனால் பனிப்பொழிவு வந்தவுடன் பந்து வழுக்கிக் கொண்டு வந்தது. இதனால் பின்னால் சென்று ஆடுவதற்கு எளிதாக இருந்தது. பந்துவீச்சாளர்கள், குறிப்பாக ஷாபாஸ் அகமத் முதல் 10 ஓவர்களில் பந்து வீசியது எங்களுக்கு திருப்புமுனையான விஷயமாக அமைந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ” என்று கூறினார்!

- Advertisement -