டி20 உலகக் கோப்பை 2024

மேட்ச் எந்த இடத்துல இருந்தாலும் எங்களால ஜெயிக்க முடியும்.. இப்ப நாங்க சோக்கர்ஸ் கிடையாது – எய்டன் மார்க்ரம் பேட்டி

இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் பார்படாஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ள இருக்கின்றன. இதனையில் தென் ஆப்ரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணி இந்த முறை ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிப்போட்டியை வந்து சேர்ந்திருக்கிறது. அந்த அணி நேபாள் போன்ற கத்துக்குட்டி அணியிடம் கூட ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுதான் வந்தது. கையில் இருக்கும் போட்டியை தோற்றுக் கொண்டிருந்த அவர்கள், கையை விட்டு விலகிய போட்டியையும் கடைசி நேரத்தில் வெல்லுகின்ற நிலைக்கு வந்தது நம்பிக்கை தருகிறது.

இந்திய அணியை பொறுத்தவரை எல்லா துறைகளிலும் மிகவும் அருமையாக இருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கேப்டனாக மட்டுமில்லாமல் பேட்ஸ்மேன் ஆகவும் சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார். அவர் கொடுக்கும் பெரிய தொடக்கம் இந்திய அணியின் வெற்றியை மிகவும் எளிதானதாக மாற்றுகிறது.

தற்போதைய இந்திய அணியின் ஒரே கவலையாக விராட் கோலி மட்டுமே இருந்து வருகிறார். அவர் இதுவரையில் 7 போட்டிகளில் பேட்டிங் செய்து 75 பந்துகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இந்த இறுதிப் போட்டியில் விராட் கோலி இடம் இருந்து ரன்கள் எப்படியும் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் மார்கரம் ” நீங்கள் வென்றாலும் தோற்றாலும் இப்பொழுது ஒரு படி மேலே சென்று இருக்கிறீர்கள். நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக விளையாடி வருகிறோம். நடக்க இருப்பது ஒரு புதிய போட்டி. இந்தியா ஒரு சிறந்த அணி. நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பான முறையில் பயிற்சி செய்து வருகிறோம். இந்தியா போன்ற நல்லஅணிக்கு எதிராக எங்களுக்கு நல்ல வாய்ப்பு.

இதையும் படிங்க : கோலி ரோகித் ஒருத்தர் டி20 உ.கோ-ல இப்ப இருந்திருக்க மாட்டாங்க.. நடந்த விஷயம் இதுதான் – சேவாக் பேட்டி

ஒரு கேப்டனாக நான்தான் தென் ஆப்பிரிக்கா அணியை இந்த இடத்திற்கு கொண்டு வந்ததாக நான் பார்க்கவில்லை. இது ஒரு குழு முயற்சி. சில ஆண்டுகளாக இந்த அணி தொடர்ந்து பயணத்தில் இருந்து தற்போது இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது.முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு வந்திருப்பது எனக்கு மட்டுமில்லாமல் மொத்த அணிக்கும் பெருமையானது.போட்டி எந்த நிலையில் இருந்தாலும் வெல்ல முடியும் என்கின்ற நம்பிக்கை வந்திருக்கிறது. இதுதான் எங்களுக்கு முக்கியமானது என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by